ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்களை அதிகம் படிக்காதீர்கள். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க முடியாவிட்டாலும் தத்தித் தத்தியாவது ஆங்கிலத்திலேயே படித்து விடுவது நலம். சமீபத்தில் தெ வெஜிடேரியன் என்ற நாவலை தமிழில் கைமா பண்ணி வைத்தது பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். what the hell என்ற ஆங்கிலப் பதத்தை என்ன நரகம் இது என்று மொழிபெயர்த்திருக்கிறார் திருவாளர் முழிபெயர்ப்பாளர். இதை விட பெரிய காமெடியையெல்லாம் நான் எடுத்துப் போட்டு தொங்கவிட்டிருக்கிறேன். ஆனாலும் முழிபெயர்ப்பாளர்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
மொழிபெயர்ப்பு பற்றி என் நண்பர் சுந்தர் சருக்கை ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் அவர் மொழிபெயர்ப்பு பற்றிய சில அரிய கருத்துக்களை முன்வைக்கிறார். இதுவரை நான் அறியாதவை அவை. நீங்களும் வாசிக்கலாம்.
https://scroll.in/article/1073094/touching-the-untouched-sundar-sarukkai-on-translation-and-language