சித்த மருத்துவம் – சென்னையில் ஒரு விழா – அடியேனின் உரை

சித்த மருத்துவம் பற்றி நீண்ட காலமாக எழுதி வருகிறேன். எழுதுவதோடு மட்டும் அல்லாமல் என் உடலை வைத்தே பல பரிசோதனைகளையும் செய்திருக்கிறேன். அது குறித்து என் நாவல் எக்ஸைலில் விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது என் நண்பரும் சித்த மருத்துவருமான டி. பாஸ்கரன் எழுதிய சித்தாவரம் என்ற நூல் 17.11.2024 அன்று வெளிவர இருக்கிறது. அதன் வெளியீட்டு விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். என் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் விழாவுக்கு வரும்படி அழைக்கிறேன். விழாவில் சித்த மருத்துவம் பற்றி ஓர் உரையாற்ற இருக்கிறேன். மிக முக்கியமான உரையாக இருக்கும்.

நான் எந்த மருத்துவ முறைக்கும் எதிரானவன் அல்ல. அதனால் அலோபதி மருத்துவர்களையும் விழாவுக்கு வருமாறு அழைக்கிறேன்.

விழா நாள்: 17.11.2024. நேரம்: மாலை 6 மணி.

இடம்: சிகரம் அரங்கம், குமரன் காலனி மெயின் ரோடு, வட பழனி.

தொடர்புக்கு: 78260 57789