பழுப்பு நிறப் பக்கங்கள்

சாருவின் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் படித்து முடித்த பின்பு, அதில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் எல்லா எழுத்தாளர்களையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஒரு எழுத்தாளரும் மற்ற எழுத்தாளர்கள் பற்றி அறிமுகப்படுத்தி இத்தனை விரிவாக எழுதுவார்களா என்று தெரியவில்லை. சாரு செய்திருப்பது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை என்றே சொல்ல வேண்டும். இதுவரை அவர் பரிந்துரைத்த எல்லா எழுத்தாளர்களின் எழுத்து நடையிலும் சரி, மொழியிலும் சரி, எனக்கு இலக்கியத்தின் மீது இதுவரை இருந்து வந்துள்ள பார்வையை மாற்றி விட்டது. அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், ஆதவன் – இதுவரை படித்த இந்த மூவரின் எழுத்துக்களும் எனக்கு வெவ்வேறு மொழிநடையைப் போல்தான் இருந்தன. ஆனால் ஒவ்வொருவரையும் படிக்கும்போது ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைத்தது. மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது. முக்கியமாக, ஆதவனின் என் பெயர் ராமசேஷனை இப்போதுதான் படித்து முடித்தேன். இதுவரையில்லாத ஒரு புதிய அனுபவம்.

ரகு (இன்ஸ்டாவில்)

ரகு