படத்தைப் பற்றிய என் குறிப்பு வெளிவந்த பத்தே நிமிடங்களில் ஶ்ரீயின் ஒரு கேள்வி வந்து விழுந்தது. அதில் எக்ஸைல் பற்றிய ஒரு நிராகரிப்பும் இருந்தது. ஶ்ரீ அப்படித்தான் சொல்ல வேண்டும். அதுதான் நியாயமும் கூட. அதனால் அவளை மன்னித்து விட்டேன். மற்றபடி எக்ஸைல் பிரபஞ்ச அன்பு குறித்த ஒரு சாசனம். என் எழுத்துக்களிலேயே என்னைப் பற்றி அதிகம் வெளிப்படுத்திக்கொண்டது அந்த நாவலில்தான். ஒரு தமிழ் எழுத்தாளனின் வாழ்வியல் ஆவணம் அது.
இனி ஶ்ரீ:
Put your exile story on the back burner.. there’s something far more profound that slipped through the cracks. Very beautiful. After the car-driving scene, a thought took root in my mind… what could set his soul alight again? Could it be a woman? Was that a bridge too far? And then, in the very next scene, he bared his heart, unfiltered. He wasn’t just craving a passing embrace…he yearned for a woman to share his nights, to wake beside him in the hush of morning. A longing so unshakable, it coursed through him like an unspent fire… Just Woow!!
This character development is nothing short of astounding. I found myself thinking.. no, worrying about him. How could someone so utterly devoted to the art of loving women be without one in his life? I couldn’t resist myself sending this to you.
***
கர்னல் தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்று ஏங்குகிறார். காலையில் எழுந்தால் தன்னை அணைத்துக்கொண்டு உறங்கும் ஒரு பெண் இல்லையே? அதுகூட அவரது தற்கொலை உணர்வுக்குக் காரணமாக இருக்கலாம். அவருடைய வாழ்வு கொடிய தனிமையினால் ஆனது.
ஆனால் ஊர் பூராவும் பெண் தேடி மேய்பவர்களுக்குத் தனியாக ஒரு பெண் இருக்க மாட்டாள். வெளியிலிருந்து பார்க்க உல்லாசமாக இருக்கும். கர்னலோடு வாழும் பெண் ஒரே நாளில் ஓடி விடுவாள். என்ன, கர்னலுக்கு ஒரு ஸஞ்ஜனா கிடைக்கவில்லை. கிடைத்தால் அவர் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும். ஆனால் படத்தின் இறுதியில் அதற்கான நம்பிக்கை விதைக்கப்பட்டு விட்டதே? கடைசியில் கர்னலுக்கும் ஒரு ஸஞ்ஜனா கிடைத்து விட்டாள் என்றுதான் படம் முடிகிறது.
சுபம்.
பின்குறிப்பு: Profundity என்று பார்த்தால் எக்ஸைலில் வரும் கேசவன், நாய்கள், மீன்கள் எல்லாமே ஆயிரம் ஆயிரம் உன்னதங்களைப் பேசும். பிராணிகளை நேசிக்கும் உனக்கு – ஒரு பூனைக்குக் கால் ஒடிந்ததும் ஒரு வாரம் உணவு உண்ணாமல் அழுது கொண்டிருந்த உனக்கு – அதுவும் அது ஒரு தெருப்பூனை – எக்ஸைல் நாவலின் profundity புரியாமல் போனது துரதிர்ஷ்டம்தான். அந்த நாவலின் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை விட்டு வெளியே வந்தால் எல்லாம் புரியும்.