நேற்று எழுதியதன் தொடர்ச்சியாக இன்னும் சில விஷயங்கள். கர்னலுக்கும் எனக்குமான இணைத்தன்மைகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் இன்னொன்று. சார்லியை கர்னலின் உதவிக்கு அனுப்பும்போது கர்னலின் மகள் சார்லியிடம் ஒரே ஒரு விஷயத்தை வலியுறுத்துவாள். ”அவரை சார் என்று அழைக்காதே, கெட்ட கோபம் வந்து விடும்.” ஆனாலும் சார்லி ஒரு மாணவன் என்பதால் எடுத்த எடுப்பிலேயே கர்னலை சார் என்று அழைத்து கெட்ட வார்த்தையில் திட்டு வாங்குவான். அவனுக்கு அதை மாற்றிக் கொள்ள மேலும் சில வசவுகளை வாங்க வேண்டியிருக்கும். எனக்கும் என்னை சார் என்று அழைத்தால் பிடிக்காது. அப்படி அழைப்பவர்களோடு நான் பழகுவதைத் தவிர்ப்பது வழக்கம். நானுமே யாரையும் சார் என்று விளிக்க மாட்டேன். ஆனால் எல்லா விதிக்கும் விலக்கு உண்டு அல்லவா? முப்பத்திரண்டே வயதான டாக்டர் பாஸ்கரனை சார் என்றே அழைக்கிறேன். அவருமே என்னை சார் என்றே அழைக்கிறார்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம். இப்படி என்னை சார் என்று அழைக்காதீர்கள் என்று எந்தப் பெண்ணிடமும் சொல்வதில்லை. இந்திய ஆங்கிலப் பெண் எழுத்தாளர்கள் பலர் என்னை சார் என்றே அழைக்கிறார்கள். என் மொழிபெயர்ப்பாளர் நந்தினியும் சார் என்றே அழைக்கிறாள். யாரிடமும் சாரு என்று அழையுங்கள் என்று சொல்வதே இல்லை. அதில் நான் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறேன். சாரு என்று அழையுங்கள் என்று சொன்னால், கிழம் flirt பண்ணுகிறது என்று துளியும் நாக்கில் நரம்பில்லாமல் சொல்லி விடுகிறார்கள். அதற்குப் பயந்து கொண்டே நான் பெண்களிடம் மட்டும் இந்த அழைக்கும் விஷயத்தில் வைத்துக்கொள்வதே இல்லை. சார் மட்டுமில்லை, என் பாஸ்போர்ட் பெயரான அறிவழகன் என்று அழைத்தாலும் சரி, என் நைனா பெயரான கிருஷ்ணசாமி என்று அழைத்தாலும் சரி, நான் எந்த ஆட்சேபணையும் செய்வதில்லை. ஏற்கனவே வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போல் நடந்து கொள்ளும் பெண்களிடம் பழகுவதில் மண்டை குழப்பிக் குழப்பி அடிப்பதால் இம்மாதிரி அனாவசியப் பிரச்சினைகளை வைத்துக் கொள்வதே இல்லை.
நேற்றுக் கூட பாருங்கள், நான் செய்யாத ஒரு தவறுக்காக ஒரு பெண்ணிடம் ஏழு முறை மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தது. உடனே அவள் பதினாலு முறை மன்னிப்புக் கேட்டாள். ஏதோ மஹாத்மா போல் இருக்கிறது. ஆக மொத்தம் இருபத்தோரு மன்னிப்புகள் காற்றில் மிதந்தன. என்ன ஒரு அழகான உலகம்!
இதை வைத்து எத்தனை கலாட்டா நடந்தாலும் ஸெண்ட் ஆஃப் எ வுமன் என்னை மிகவும் ஈர்த்த ஒரு படம். மறக்க முடியாத படம். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் உல்லாசம் நாவலை நீங்கள் வாசிக்கும்போது அதன் நாயகன் ரிஷி வரும் இடங்களில் நீங்கள் ஸெண்ட் ஆஃப் எ வுமன் கர்னலை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது.
இனி ஶ்ரீயின் மற்றொரு விளக்கம்:
Holy smokes, Charu!
You know, I just recently hit that moment in the novel (Ullasa), and boom! It was staring me in the face. The same scene where Rishi, who had been with women before but never had anyone who woke up beside him in the morning. After spending days and nights with Sanjana, he watches as she wakes up next to him for the first time in his life, realizing the depth of the moment. As she prepares to leave, he is overwhelmed with emotion, pouring his heart out to her, saying those very words so touchingly. And now, here it is again. Same soul, different body! Colonel Frank Slade utters those exact words, carrying the same weight and the same longing. And you? You just walked right past it like a tourist ignoring a masterpiece! Charu, come on. This was the moment… the very essence of it all. How did you miss it? Did you blink at the wrong time, or did your mind take a coffee break?
This was the piece of the puzzle I was talking about! That moment was deeply unique… It hit me instantly. It was a rare gem, not just because such a moment exists in life, but because of how it was hammered into the spine of the narrative, making it impossible to ignore. And when I mirrored it against the ‘Ullasa’ scene, its meaning only deepened, like a melody that lingers long after the music stops.
Shree
