Scent of a woman

இந்தப் படத்தை எப்படி இத்தனைக் காலமாகத் தவற விட்டேன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இதில் வரும் த்தாங்கோ நடனக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். அல் பச்சீனோவின் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தும் படம். இந்தப் படத்தில் நடிப்புக்காக அவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார்.

நேற்று நாள் முழுதும் எழுதி விட்டு ஸில்வியா ப்ளாத்தின் தெ பெல் ஜார் நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு எட்டரை மணி வாக்கில் ஏதாவது படம் பார்க்கலாம் என்று தோன்றியபோது இந்தப் படம் கண்ணில் பட்டது. இடையிடையே ஏதேதோ பூனை வேலைகள். பத்து மணிக்கே உறங்கச் சென்றாக வேண்டும். இல்லாவிட்டால் காலையில் நடைப் பயிற்சிக்கு நேரமாகி விடும். எப்படியும் ஆறரைக்குக் கிளம்பி விட வேண்டும்.

பத்து மணி ஆன போது படத்தில் பாதிதான் ஆகியிருந்தது. கண் விழிக்க முடியாது. படத்தையும் விட முடியவில்லை. அதனால் படத்தின் இறுதிப் பகுதியை மட்டும் பார்த்து விட்டு, விட்டதை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தூங்கி விட்டேன். இறுதிப் பகுதியைப் பார்த்து விட்டதால் மனம் நிம்மதி ஆயிற்று.

இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி ஸ்ரீக்கு ஒரு மெஸேஜ் கொடுக்கலாமா என்று யோசித்தேன். அவளுடைய தொலைபேசியில் மெஸேஜ் வந்தால் அந்த நோட்டிஃபிகேஷன் கோவில் மணி மாதிரி அடிக்கும். அடுத்த வீட்டில்கூட எழுந்து கொண்டு விடுவார்கள். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு மெஸேஜைத் தட்டி விட்டுத் தூங்கினேன்.

படத்தைப் பற்றி நான் வேறு ஒன்றும் சொல்லவில்லை. படத்தில் வரும் கர்னல் (அல் பச்சீனோ) என்னை மாதிரியே இருந்ததாகத் தோன்றியது. ஓய்வு பெற்ற கர்னல். போரில் கண் பார்வை போய் விட்டது. வண்ணமயமாக வாழ்ந்த அவருக்குக் கண் பார்வையில்லாமல் வாழ்வது பிடிக்கவில்லை. தற்கொலை உணர்வுடன் நாட்களைக் கடத்துகிறார். நான் ஒரு தமிழ் எழுத்தாளன். என் முன்னோடிகள் பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டாலும் அல்பாயுசில் மாண்டிருக்கிறார்கள். ரெண்டும் ஒன்றுதான். ஆக, கண் பார்வை பறிபோன கர்னலும் தமிழ் எழுத்தாளனான நானும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஆனால் கர்னல் என்னை மாதிரியே இருக்கிறார் என்று எனக்குத் தோன்றியதற்குக் காரணம் அது அல்ல.

இந்த உலகத்திலேயே யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் அந்தக் கர்னலுக்கும் எனக்கும் (படத்தின் இயக்குனருக்கும்) தெரிந்திருந்தது. ரொம்பச் சின்ன விஷயம்தான். ஆனால் யாருக்கும் தெரியாது.

எனக்கு சாலையைக் கடக்கத் தெரியாது. அதனால் என்னோடு வரும் நண்பர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். (சீனி மட்டும் விதிவிலக்கு). “ங்கொய்யால, ரோட்டைக் கூட க்ராஸ் பண்ணத் தெரியலேன்னா சாவுடா” என்பது சீனியின் ஃபிலாஸஃபியாக இருக்கலாம்.

ஆனால் திரும்பவும் இந்த “நல்லவர்களின்” மனிதாபிமானம் என் மீதான வன்முறை என்றே எனக்குத் தோன்றும்.

”நீங்கள் என் கையைப் பிடிக்கக் கூடாது. நான்தான் உங்கள் கையைப் பிடிக்க வேண்டும்.”

நீங்கள் பிடித்தால் அது வன்முறை.

கர்னலைப் பார்த்துக்கொள்ள ஒரு பள்ளி மாணவன் வருவான். அந்த வார விடுமுறையில் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகளும் மருமகளும் வெளியூர் போகிறார்கள். மாணவன் வந்ததும் கர்னலின் கையைப் பிடிப்பான். பாயும் புலி போல் சீறுவார் கர்னல். வீடே அதிரும்.

“டோண்ட் டச் மீ… ஐ டச் யூ…”

அப்படியும் மறந்து விட்டு மீண்டும் அவர் கையைப் பிடிப்பான். இந்த முறை கடும் கெட்ட வார்த்தைகளோடு வீட்டை கிடுகிடுக்க வைப்பார்.

நான் மென்மையானவன். அதனால் என் கையைப் பிடிக்கும் நண்பர்களிடம் அப்படி சீற மாட்டேன். எதுவுமே சொல்ல மாட்டேன். நானாகவே அவர்களின் கையை விலக்கி விட்டு அவர்களின் கையைப் பிடித்துக் கொள்வேன். ஸ்ரீயிடம் மட்டும் உரிமை எடுத்துக்கொண்டு ஒருமுறை சொன்னேன். ஆனால் அவளும் அதன் தாத்பரியம் புரியாமல் மீண்டும் மீண்டும் என் கையைப் பிடித்தே சாலையைக் கடக்க உதவி செய்து கொண்டிருந்தாள்.

கோவா போனால் சில பப்களில் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். அதிலும் இரும்புப் படிகள். அதிலும் இடைவெளி விட்டு தகடு தகடாக இருக்கும். ஏதோ சர்க்கஸில் பார் விளையாட்டு விளையாடுவது போல் தோன்றும். அப்போதும் யாராவது என் கையைப் பிடித்து உதவி செய்து வன்முறை பயில்வார்கள். ஒன்றும் சொல்ல மாட்டேன்.

எனக்கு ஒரு இருபது வயது இருக்கும்போது ஒருநாள் கண் பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க உதவி கேட்டார். நான் என் வலது கையை நீட்டிப் பிடித்துக் கொள்ளச் சொன்னேன். சாலையைக் கடந்ததும் அவர் என்னிடம் “நீங்கள் ஒரு ஆள்தான் இப்படிக் கையை நீட்டினீர்கள். மற்றவர்கள் எல்லோருமே என் கைகளைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படிப் பிடிப்பதும் பிடிக்காமல் தனியாக நடப்பதும் எங்களுக்கு ஒன்றுதான்” என்றார். எனக்கு இதை யாருமே சொல்லித் தரவில்லை. மற்றவருக்காக வாழ்தல் என்பதை என் தத்துவமாக ஏற்றிருப்பதால் எனக்கே தோன்றியதுதான் அது.

இது மட்டும் அல்ல. படம் முழுவதுமே கர்னல் மூலமாக நான் தான் பேசிக்கொண்டிருந்தேன். பல வசனங்கள் எக்ஸைல் நாவலில் வந்திருக்கின்றன.

கர்னலும் சார்லியும் (உதவிக்கு வந்த மாணவன்) நியூயார்க் நகரில் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். கர்னல் சார்லியிடம் சொல்கிறார். ”இந்த உலகின் ஆகப் பெரிய அற்புதம் பெண்தான்.” சொல்லிவிட்டு பெண்ணின் அங்கங்களை வர்ணிக்கிறார். கண்கள், கைகள், முகம் என்று வர்ணித்துக்கொண்டு வரும்போது உதடு என்றதும் அவர் சொல்கிறார்: ”ஆஹா, ஒரு பெண்ணின் உதடுகளில் முத்தமிடும்போது, ஒரு பெரிய பாலைவனத்தில் பயணம் செய்து விட்டு முடிவில் ஒரு வைன் கிளாஸ் குடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்…” அடுத்து தொடையை வர்ணிக்கிறார். அந்த வர்ணனை முடிந்ததும் சார்லியிடம் கேட்கிறார். “இந்த உலகத்திலேயே ஆகச் சிறந்த வார்த்தை என்ன தெரியுமா?”

”தெரியவில்லை, சொல்லுங்கள்.”

“அந்த வார்த்தைக்கு ரெண்டே எழுத்துதான். அதுதான் இந்த உலகின் ஆகச் சிறந்த வார்த்தை. அது தொடைகளுக்கு நடுவிலே உள்ள புஸ்ஸி…”

இன்னொரு சமயம், இருவரும் தங்கியிருக்கும் ஓட்டல் அறையில் ஒரு பெண் கர்னலுக்கு ஆடைக்கு அளவு எடுக்கிறாள். அப்போது அவள் கையிலிருக்கும் ஊசி அவரைக் குத்தி விடுகிறது. உடனே கர்னல் சொல்கிறார்: “I love you when you hurt me.” (இதே போன்ற ஒரு வசனம் எக்ஸைலில் வருகிறது. “நீ விஷத்தைக் கொடுத்தாலும் நான் அதை அமிர்தமாக அருந்துவேன்.”)

இப்படியே படம் நெடுகிலும் சுவாரசியமான தருணங்கள் உண்டு.

இது எல்லாம்தான் அந்தக் கர்னலையும் என்னையும் ஒப்பிடச் செய்தது. இன்னொரு விஷயம், பெண்கள் வாசனைத் திரவியம் பயன்படுத்தியிருந்தால் அது என்ன பிராண்ட் என்று சொல்லி விடுவேன். அநேகமாக எனக்குத் தெரியாத வாசனைத் திரவியங்கள் இல்லை. ஆனால் ஆண்கள் விஷயத்தில் தோற்று விடுவேன். ப்ரூட் போன்ற ஒருசிலவற்றைத்தான் என்னால் கண்டு பிடிக்க முடியும். மிகவும் அரிதான பிராண்டுகளைக்கூட சொல்லி விடுவேன். (ஆனால் பெண்கள் பிராண்டுகள்தான்.) இந்த விஷயத்தில் கர்னல் ஒரு கில்லாடி. பிராண்டு மட்டும் அல்ல. அந்த பிராண்டில் இது எந்தப் பிரிவு என்பதைக்கூட சொல்லி விடுவார்.

படத்தைப் பார்த்து விட்டு ஸ்ரீ அழைத்தாள். “அது எப்படி 1992இலேயே அச்சு அசலாக உங்களைப் போலவே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார் அந்த இயக்குனர்?” என்பதுதான் அவள் முதல் கேள்வி.

மீதியை வாட்ஸப்பில் அனுப்பினாள். அது கீழே:

The Colonel is exactly like you… green as a sprout when it comes to women. He has got charm to burn, and his character is a real page-turner… like a thriller, full of twists. I’m on the edge of my seat, wondering what he’ll do next. Now I get your itch to skip to the ending before finishing the middle of a film.

Since I have to step out, I feel the same urge, but I won’t jump the gun. Patience is my strong suit. For films like this, the slow burn is what makes it intoxicating.

His personality stirring up the hormones… Spreading the happiness inside the heart…would like to watch him forever… I am just in 30 min of the film.. Feeling like I will miss him in 2 hours

***

Finished watching the movie… Hoo -ah!! Speechless… not a tear left to shed… a heart too heavy for words.

One of my best hours in life!

***

இப்போதெல்லாம் நன்கொடையோ சந்தாவோ எதுவும் வருவதில்லை. நானும் நினைவுபடுத்தி எழுதுவதில்லை. இப்போது நினைவுபடுத்துகிறேன். வங்கி விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai