ஆயுர்வேதம்

Charu,
I am following your blog for the past 4 years.
I see you as a writer,doctor,musician,master chef
Movie critic,sometimes as nosterdams (accurate election results)

All i am expecting from you is,you have mastered the ayurvedic medicene and its benefits, why cant you write it as a book and help your kids (like me)  to live a helathy life.

Right from your ginger tips to 4 fruits juice.. Everything is precious for future generation.
Please consider.
I know this is not your main stream.
You are writer,you are always busy.
But please consider,my humble request charu.
Regards,
Vivek

அன்புள்ள விவேக்,

நீங்கள் எனக்குச் சொன்ன அடைமொழிகள் அனைத்தையுமே இறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன்.  இன்று கூட காலையிலிருந்து கீதையைத்தான் படித்துக் கொண்டிருந்தேன்.  படித்துக் கொண்டிருக்கிறேன்.  கீதையின் பதினெட்டாவது அத்யாயத்தில் ஒரு சுலோகம் வருகிறது.  எனக்கு மிகவும் பிடித்த சுலோகம்.

ந த்வேஷ்ட்யகுஷலம் கர்ம குஷலே நாநுஷஜ்ஜதே/

த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஷய://

எவன் ஒருவன் நன்மையைத் தராத செயலை வெறுப்பதில்லையோ, மேலும், நன்மையைத் தரக் கூடிய செயலில் பற்றும் கொள்வதில்லையோ அந்த சுத்தமான ஸத்வகுணம் கொண்டவனே சந்தேகம் நீங்கப் பெற்றவனும், அறிஞனும், தியாகியும் ஆவான். அந்த நிலையை அடைவேனோ இல்லையோ ஒவ்வொரு தருணமும் இந்த சுலோகத்தை என் மனம் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறது.   பணம், பொருள், பதவி போன்றவற்றின் மீது எனக்கு எந்தப் பற்றும் இல்லாமல் போனதற்கு இந்த சுலோகம் முக்கியமான காரணம்.  உறக்கத்திலிருந்து எழுப்பினாலும் இந்த சுலோகத்தை நான் சொல்லுவேன்.  சொல்லச் சொல்ல நினைக்க நினைக்க நம் மனம் இந்த சுலோகத்தில் ஆழ்ந்து நாமும் இதேபோல் ஆகி விடுவோம்.

மற்றபடி ஆயுர்வேதம் பற்றித் தனியாக நூல் எழுதும் அளவுக்கு என்னிடம் ஆய்வுக் குறிப்புகள் உள்ளன.  நான் வெறும் ஆய்வுகள் மட்டும் செய்வதில்லை.  நானே என்னிடம் அவற்றை சோதித்துப் பார்த்து விட்டே எழுதுகிறேன்.  நூறு ஆண்டுகள் வரை ஒரு மனிதன் நோய் நொடியே இல்லாமல் வாழ்வதற்கான வழி என்ன என்பதை என்னால் 200 பக்கத்தில் எழுத முடியும்.  எதை முதலில் செய்வது என்று ஒரே திகைப்பாக உள்ளது.  இப்போதைக்கு லத்தீன் அமெரிக்க சினிமாவும், ஸ்ரீவில்லிபுத்தூரும் என் நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

உங்களுக்கும் இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மூன்று டிப்ஸ் தருகிறேன்.  காலையில் இஞ்சி, மதியம் சுக்கு பானம், இரவில் கடுக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.  வாரம் ஒருமுறை தவறாமல் அப்யங்கம் செய்து கொள்ளுங்கள்.  அப்யங்கம் – எண்ணெய்க் குளியல்.  எப்படி எடுத்துக் கொள்வது என்று எழுதியிருக்கிறேன்.  பணம் இருப்பவர்கள் ஆயுர்வேத நிலையங்களுக்குச் சென்றால் இன்னும் நன்றாகப் பலன் கிடைக்கும்.  அப்யங்கம் செய்து கொள்ளும் தினத்தில் மைதுனம், சுயமைதுனம், குடி போன்ற விஷங்களில் ஈடுபடக் கூடாது.  வாரம் ஒருமுறை அப்யங்கம் விடாமல் செய்ய வேண்டும்.  நேரம் இல்லை என்று ஜூட் விடக் கூடாது. மூன்றாவது, டாஸ்மாக் மதுவைக் கையாலும் தொடக் கூடாது.  மிலிட்டரி கேண்டீன்களில் கிடைப்பது நல்ல சுத்தம்.  அதற்காக தினமும் அதில் மூழ்கக் கூடாது.  வாரம் ஒருமுறை ஓகே.

சாரு

Comments are closed.