எப்படிப் பாடினரோ…

ஒருவகையில் நான் லிங்குசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அவருடைய படத்தில் கர்னாடக சங்கீதத்தை அவமானம் செய்திருந்ததால் எனக்குள் ஏற்பட்ட ஆவேசமும் கோபமும் மும்மூர்த்திகளைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற அளவுக்கு என்னைக் கொண்டு வந்து விட்டது.  அதனால் என்ன படித்துக் கொண்டிருந்தாலும் எழுதிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் கர்னாடக சங்கீதம் மெலிதாக ஒலித்துக் கொண்டே இருப்பது போல் வைத்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்குப் பிடித்தவர்கள் என்று இதில் ஒரு பட்டியலும் உண்டு. சில பேரைக் கேட்பது அவ்வளவாக ரசிக்கவில்லை.  பெயரைச் சொல்ல முடியாது.  நான் ஒரு பாமர ரசிகன்.  ஏன் அவர்களைப் பிடிக்கவில்லை என்ற காரணமும் தெரியவில்லை.  பிடித்தவர்களைப் பற்றிப் பேசலாம்.  மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், மகாராஜபுரம் சந்தானம், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், டி. கே. பட்டம்மாள் என்று அது ஒரு பெரிய பட்டியல்.  வாழ்நாள் பூராவும் கேட்டாலும் கேட்டு முடிக்க முடியாது போல் இருக்கிறது.  தீட்சிதரின் மஹாலக்ஷ்மி கருணா ரஸ லஹரியைக் கேட்கும் போது இதை அவர் எப்படிப் பாடியிருக்கிறார், இவர் எப்படிப் பாடியிருக்கிறார் என்று ஒன்றுக்கொன்று போய்க் கொண்டே இருக்கிறது.  ஒரு கிருதிக்கே இப்படி!  கர்னாடக சங்கீதம் ஒரு சமுத்திரம்தான்.  உள்ளங்கையில் அள்ளுவதற்கே ஒரு ஆயுள் முடிந்து போல் தோன்றுகிறது.  இந்த நிலையில் கர்னாடக சங்கீதத்துக்கு ஏற்ற மொழிகள் தெலுங்கும், சம்ஸ்கிருதமும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  சமீபத்தில் சுத்தானந்த பாரதி இயற்றிய எப்படிப் பாடினரோ என்ற பாடலை டி.கே. பட்டம்மாள் பாடியிருப்பதைக் கேட்ட பிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.  முதலில் அப்படி நினைத்ததற்காக வருத்தமும் அடைந்தேன்.  முதலில் சுத்தானந்த பாரதியின் பாடலைப் படித்து விட்டு, பிறகு டி.கே. பட்டம்மாளைக் கேளுங்கள்.  ராகம், கர்நாடக தேவகாந்தாரி.

 https://www.youtube.com/watch?v=-s4YQK0ycho

தன்னான்னா.. ததரின்னானா…

எப்படிப் பாடினாரோ எப்படிப் பாடினாரோ அடியார்
எப்படிப் பாடினரோ அடியார் எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ

அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும் ம்..
அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே

எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ

குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி..
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்

எப்படிப் பாடினாரோ

கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கருணைக்கடல் பெருகி ………….. …………. கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
எப்படிப் பாடினாரோ

Comments are closed.