மார்த்தினி

(ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில் T என்ற எழுத்தை த என்றுதான் உச்சரிக்கிறார்கள்.  எனவே மார்த்தினி என்றே குறிப்பிடவும்.  அங்கே போய் மார்ட்டினி என்றால் ஏற இறங்கப் பார்க்கிறார்கள்.  அந்தப் பார்வைக்கு நீ என்ன ஆங்கில அடிமையா என்று பொருள் என்று நண்பன் சொன்னான். )

டியர் சாரு,

உங்கள் எழுத்தைப் படித்து ரசிப்பதோடு சரி.  உங்கள் கற்றலின் பன்முகத் தன்மையை வியக்கத்தான் முடிகிறது,  நந்தனார் போல.  விஷயம் இது தான்…  உங்களைப் படித்து விட்டு நிறைய தேடி மிக சிலதைக் கேட்டு, இன்புற்று வியந்து போகிறேன்.  அதில் ஒரு இத்தாலிய பாடகி இவர்.  இது நான் கேட்டு ரசித்தது மட்டுமே.  மற்றபடி விபரம் ஒன்றும் தெரியாது.  இது உங்கள் கொடை; mia martini e Roberto murolo,”cu”mme”duetto “Azzurro1992”

எம். சுப்ரமணியன்.

சுப்ரமணியனின் கடிதத்தைப் பார்த்ததும் என்ன இது ஸ்பெல்லிங் தவறாக இருக்கிறதே என்று எண்ணினேன்.  ஏனென்றால், மியா மார்த்தினா என்ற பாடகியை ஜெனிஃபர் லோபஸ், ஷகீரா அளவுக்கு எனக்குப் பிடிக்கும்.  கனடாவைச் சேர்ந்தவர்.  ஆனால் அவர் இளைஞராயிற்றே, 1992-இல் சிறுமியாக அல்லவா இருந்திருப்பார் என்று குழம்பினேன்.  பிறகுதான் தெரிந்தது, சுப்ரமணியன் அனுப்பிய மியா மார்த்தினி பழைய பாடகி என்று.  கேட்டேன்.  பிரமாதமாக இருந்தது.  பிறகு அவரைப் பற்றிய விபரங்களையும்  பார்த்தேன்.  1947- இல் பிறந்த மியா மார்த்தினி கொகேய்னை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக மாரடைப்பு வந்து 48 வயதிலேயே இறந்து போயிருக்கிறார்.  இத்தாலியப் பாடகி.  அவர் பாடிய பல பாடல்களைக் கேட்டேன்.   அற்புதமான பாடகி.  ரொபொர்த்தோ முரோலோவுடன் இணைந்து பாடிய டூயட்டின் இணைப்பை இங்கே தருகிறேன்.  மொழி புரியாவிட்டாலும் நம் இதயத்தின் அடியாழத்தைத் தொடக் கூடிய டூயட் இது.

https://www.youtube.com/watch?v=T9_PszarXIA&hd=1

மார்த்தினி பாடிய இன்னொரு பாடல்:

https://www.youtube.com/watch?v=VC2EhZ5sFFU&hd=1

மார்த்தினியை ரசிப்பது எம்.எல். வசந்தகுமாரியை ரசிப்பது மாதிரி.  ஆனால் எனக்குத்தான் ஷ்ரேயாவையும் பிடிக்குமே.  மியா மார்த்தினா  இளைஞர்களின் கனவுக் கன்னி.  இன்றைய பாடகி.  குழந்தைகள் அருகில் இருக்கும் போது பார்க்காதீர்கள்.  இதோ அவருடைய லத்தீன் நிலவு என்ற பாடல்:

https://www.youtube.com/watch?v=zrQYqhWr3GA&hd=1

மியா மார்த்தினாவின் இன்னொரு பாடல் பின்வருவது.  ஆனால் இவருடைய பாடலில் நுழையும் போது கண்களை மூடிக் கொண்டுதான் கேட்க முடிகிறது.  கண்களைத் திறந்தால் காதுகள் வேலை நிறுத்தம் செய்து விட்டு ஓடி விடுகின்றன.  விடியோவைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

https://www.youtube.com/watch?v=tG5by18ughw&hd=1

பின்வரும் விடியோவில் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.  ஒரே ஒரு பிரச்சினைதான்.  மியா மார்த்தினாவுக்கு அதிக ஆடை அணிவது பிடிக்காது போல் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=Voc2at7b2jg&hd=1

இதையெல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் எனக்கு மார்த்தினி என்ற காக்டெய்ல் ஞாபகம் வருகிறது.  சென்னையில் சில இடங்களில்தான் மார்த்தினி காக்டெய்ல் நன்றாகத் தயாரிப்பார்கள்.

http://cocktails.about.com/od/cocktailrecipes/r/mrtni.htm

மவுண்ட் ரோட்டில் உள்ள தாஜ் ஓட்டலில் மார்த்தினி நன்றாக இருக்கும்.   ஒன்றிரண்டு முறை போயிருக்கிறேன்.  ஆனால் அந்த இடம் நமக்குக் கட்டுப்படி ஆகாது.  மற்றபட் Zara-வில் மார்த்தினி சல்லிசாகக் கிடைக்கும்.  அபாரமாகச் செய்வார்கள்.  பின்வரும் இணைப்பில் மார்த்தினி எப்படி கலக்குவது என்று தெரிந்து கொள்ளலாம்.

http://cocktails.about.com/od/cocktailrecipes/r/mrtni.htm

 

 

Comments are closed.