பொதுவாக நான் பார்த்து வந்த விளம்பரங்கள் ஆடாமல் அசையாமல் நிற்கும். நம்முடைய புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்ட விளம்பரத்தில் ஒன்று போய் ஒன்று வாசகங்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இது என்ன நூதனமாக இருக்கிறதே என்று டாக்டர் ஸ்ரீராமிடம் கேட்டேன். Gif விளம்பரம் என்றார். மேலும் அந்த விளம்பரத்தைத் தட்டினால் அது https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html க்குப் போகும்படி அமைந்துள்ளது. மீண்டும் தினமலர் ஆசிரியருக்கும் மின்னிதழ் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. முன்பதிவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் விலையுள்ள புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டத்தில் டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை 500-க்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.