தி இந்து வாசகர் விழா

1. தி இந்து வாசகர் திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது.  அதில் நீதிபதி கே. சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் கார்த்தி ஆகியோருடன் அடியேனும் பேச இருக்கிறேன்.  அந்த விழாவுக்கு உங்களையும் அழைக்கிறேன்.

2. வரும் ஞாயிற்றுக் கிழமை 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பற்றி பேச இருக்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும்.