புதிய எக்ஸைல் – ஒரு மதிப்புரை

எனக்கு நாவல் எழுதும் எண்ணம் எதுவுமில்லை. ஆனால் எழுதினால் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் பாணியில்தான் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். இந்த பாணிதான் எனக்கு ஒத்துவரும் என்றும் நம்புகிறேன்.

ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல்தான் இருந்தது. முதல் 75 பக்கங்களைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஜ்யோவ்ராமிடம் போனில் சொல்லவும் செய்தேன். ஆனாலும் தொடர்ந்து படிக்குமாறு சொன்னார். எங்கோ ஓரிடத்தில் திறப்பு வந்தது. பின்னர் முழுதும் உள்ளிழுத்துக்கொண்டது.
மீன்கள், ஹில்சா, ஓ கல்கத்தா, கினோகுனியா,  ஒரே நேரத்தில் குடிக்க இரண்டு டீ கேட்டல், மழை பெய்யும் நாட்களில் படும் துயரம், bitter childhood, Lush Products, தட்டச்சு சுருக்கெழுத்தை முடித்துவிட்டுப் பணிக்குச் செல்ல நேர்தல் என்று நாவலில் பல இடங்களில் என்னை நானே பார்த்தேன். கடைசி நிகழ்வு மட்டும் எனக்கு நடக்கவில்லை. ஒருவேளை நடந்திருந்தால் நானும் எழுத்த்தாளராகி இருந்திருப்பேனோ என்னவோ? (கடவுள் இருக்கான் கொமாரு – தமிழ் வாசகர்கள்).
டெல்லி நாட்குறிப்புகள் என்று ஒரு நெடும்பகுதி வருகிறது. என்னை மிகவும் கவர்ந்த பகுதி. புலம் பெயரும் எவரும் இந்த அளவிற்கு நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இதே டெல்லியில் வெசா இருந்திருக்கிறார். திஜா இருந்திருக்கிறார். ஆதவன் இருந்திருக்கிறார். அவர்கள் யாரும் டெல்லியை இந்தக் கோணத்தில் காட்டியதில்லை. இந்திரா பார்த்தசாரதி ஓரளவிற்கு டெல்லியைக் காட்டியிருக்கிறார். ஆனால் சாரு காட்டும் டெல்லி வேறு.  இந்த நாவலில் நாம் பார்க்கும் டெல்லி துல்லியமானது. உயிரோட்டமுள்ளது.  பதினெட்டாவது அட்சக்கோட்டில் நான் பார்த்த  சிகந்திராபாத்தை விட, சந்திரசேகரனை விட, டெல்லி நாள்குறிப்புகளில் நான் காணும் டெல்லியும் அறிவழகனும் lively.
மீதியைப் படிக்க :
செல்வாவின் சிறு குறிப்பு:
புதிய எக்சைல் கிளாசிக் முறையில் எழுதப்பட்ட நடை என்பதால் உத்திகளைத் தாண்டியும் பெரிய கவர்ச்சியைக் கொண்டுள்ளது. கடும் நான்-லீனியர் தன்மை இல்லாததால், படிக்கும் போது சுலபமாக நினைவில் நிற்கிறது. இதனால் இலக்கிய வாசகர்களைத் தாண்டி பொது வாசகர்களையும் ஈர்க்கும். முதலில் இலக்கிய வாசகர்கள் படித்து முடிக்கட்டும், பிறகு பொதுத் தளத்துக்குக் கொண்டு போக இலக்கிய வாசகர்களே வழிசெய்வார்கள்.