ஒரு குற்றச்சாட்டும் பதிலும்

சாரு நிவேதிதாவும் அரவிந்தன் நீலகண்டனும் பெருமாள் முருகனைக் கண்டித்து திருச்செங்கோட்டில் இந்து வெறி அமைப்புக் கூட்டத்தில் பேசப் போகிறார்களாம் ! மகிழ்ச்சி. இப்படியே எல்லாரும் பகிரங்கமா வாங்கப்பா. அப்பதான் விவாதம் ஆரோக்கியமா நேர்மையா இருக்கும். – ஞானி//

மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு என் பதில்:
  • Charu Nivedita

    அந்தக் கூட்டத்தில் என் பேச்சின் ஆரம்பமே, நான் ஒரு இந்து அல்ல என்பதுதான். மாதொரு பாகன் நாவல் ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்று (அதற்கு முன்னுரையில் பெ.மு. நன்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்) மேற்கத்திய/ கிறித்தவ அமைப்புகளின் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்ட நாவல். ஒரு இனக்குழு முழுவதும் அப்பன் பேர் தெரியாதவர்கள் என்று எழுதுவது தான் கருத்துச் சுதந்திரமா என்பதே அங்கே நான் பேசியதன் சாரம். அ. மார்க்ஸ் எங்கெல்லாம் போய்ப் பேசுகிறார் என்று எழுத வேண்டியதுதானே? நான் எங்கே போய் பேசினாலும் என் கருத்தை மட்டுமே பேசுவேன். நிதி உதவிய நிறுவனம் இனக்குழுக்களின் wild sexual behaviour ஐ எழுதச் சொல்ல அதற்குத் தகுந்தாற்போல் திருச்செங்கோடு கோவில் திருவிழாவின் பதினான்காம் நாள் கண்டவன்களோடும் அந்த சாதிப் பெண்கள் படுத்துக் கொள்வார்கள். அதற்கு அந்தப் பெண்ணின் அம்மா, அப்பா, மாமியார் அத்தனை பேரும் ”கூட்டிக்” கொண்டு போவார்கள் என்று எழுதியிருக்கிறார். இதுதான் கருத்துச் சுதந்திரமா? ஒரு இந்து இனக்குழுவிடம் கட்டுப்பாடற்ற பாலியல் பழக்கவழக்கங்கள் இருந்தன என்று சொல்வது மேற்கத்திய கிறித்துவ நிறுவனங்களுக்கு உவப்பானது. அதேபோல் அங்கே நான் தஸ்லீமா நஸ்ரினின் லஜ்ஜா என்ற குப்பையைப் பற்றியும் பேசினேன். அதில் தஸ்லீமா பாங்க்ளா தேஷில் உள்ள அத்தனை முஸ்லீம்களும் அங்கே உள்ள இந்துக்களை கொன்று குவித்தார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார். அது ஒரு நாவலே அல்ல. வெறும் தினசரி செய்தி. அதுவும் ஒரு பக்க சார்புடையது. அது எப்படி ஒரு தேசத்தின் மக்கள் அனைவருமே – அதாவது அத்தனை கோடி முஸ்லீம்களுமே கொலைகாரர்கள் என்று தஸ்லீமா எழுதினார். என்ன மதத்துவேஷம் இது? என்று தஸ்லீமாவின் இஸ்லாமிய விரோத லஜ்ஜாவை மிகக் கடுமையாக விமர்சித்தேன். சுருக்கமாக, மாதொரு பாகன் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இனக்குழுவைக் கொச்சைப்படுத்தும் நாவல். இலக்கியத் தரமும் இல்லாதது. அதேபோல் லஜ்ஜா இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் குப்பை. இரண்டையும் சர்வதேச அளவில் பேச வைக்கும் நிறுவனங்கள் கிறித்தவ சார்பு உடையவை. இதுவே என் பேச்சின் சாரம்.
  •