பெரிய ஊர். கல்லூரிகள் நிறைய இருக்கும் ஊர். படித்தவர்கள், செல்வந்தர்கள், மாணவர்கள், உயர் மத்திய வர்கத்தினர், மத்திய வர்கத்தினர் இருக்கும் ஊர். ஆனால், வருடா வருடம் மிகக் குறைந்த அளவில் விற்பனையாகும் இடம் கோவை புத்தகக் கண்காட்சி. (கோவையை விட சிறிய ஊர்களான நெய்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் பெரும் விற்பனை ஆகிறது.)
கீழே உள்ள தகவலை சாரு ஆன்லைனில் போடுங்கள். நீங்கள் சொல்லியாவது சில வாசகர்கள் வருவார்களா எனப் பார்ப்போம்.
ஸ்ரீராம்.
கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 14 முதல் 23 வரை நடைபெறுகிறது. கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும்.
கிழக்கு அரங்கு எண் – 105, 106
உயிர்மை அரங்கு எண் – 64
இடம் – கொடிசியா வளாகம்