படித்ததில் பிடித்தது

முகநூலில் பின்வரும் குறிப்பைக் கண்டேன்.  சரவண கார்த்திகேயன் எழுதியது.

விவாக‌ரத்துக்குப் பிறகு பெண் ஜீவனாம்சம் பெற அவள் கலவியில் ஈடுபடாது இருக்க வேண்டும் என்ற மதுரை நீதிமன்ற உத்தரவு சரியானது என்றே தோன்றுகிறது. (நான் மதிப்பவர்கள் உட்பட) பலரும் இங்கே கதறுவது போல் அவள் கலவியே பெறக் கூடாது என்று மறுப்பது இதன் நோக்கம் அல்ல.

பசி போல் காமம் என்பதும் அடிப்படை மனிதத் தேவை. தாராளமாய் பெறட்டும். ஆனால் அவளுடன் கலவியில் ஈடுபடுபவன் அவளது ஜீவனைக் காக்கலாமே என்ற தர்க்கக் கேள்வி தான் காரணம். சுருங்கச் சொன்னால் வெல்லம் தின்பது ஒருவன், விரல் சூப்புவது இன்னொருவனா என்பது தான்.

மற்றபடி கற்பு, பரிசுத்தம் என்பதெல்லாம் காரணம் இல்லை. இதை எப்படி அமல்படுத்த முடியும் என்பதன் நடைமுறைச் சிக்கல்கள் வேறு விஷயம். ஆனால் theoretically சரியான தீர்ப்பு தானே!

நான் எவனோ ஒருவனுடன் கூடிக் களிப்பேன், ஆனால் எப்போதோ விவாகரத்தில் பிரிந்து போன கணவன் தான் நான் வாழ காசு தர வேண்டும் என்று கேட்பது என்ன மாதிரியான வெட்கங் கெட்டதனம்? இளைத்தவன் தலையில் மிளகாய் அரைப்பது தான் பெண்ணுரிமையா? அல்லது பெண்ணியம் என்பதும் சுயமரியாதை என்பதும் வேறு வேறா?

இதை எதிர்ப்பவர்களின் தர்க்கம் தான் என்ன?