பழுப்பு நிறப் பக்கங்களுக்காக தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஆச்சரியம். பேய்க் கவிதை என்ற அவருடைய கதை. எனக்கு நான் எழுதிய நேநோ என்ற கதையை நினைவூட்டியது. அவரும் நேநோவைப் படித்திருக்க மாட்டார். நானும் இப்போதுதான் பேய்க் கவிதை படிக்கிறேன். ஜனவரி 99-இல் எழுதப் பட்டது பேய்க் கவிதை. நேநோ 1991-இல் எழுதப்பட்டது.