தேவகோட்டை சந்திப்பு

வரும் 27.12.2015 அன்று (ஞாயிறு) காலை ஒன்பது மணி அளவில் தேவகோட்டை, ராம் நகர், தாய் மஹாலில் லயன்ஸ் சங்கத்தின் மண்டல சந்திப்பில் உரையாற்றுகிறேன். மாவட்ட ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் போன்றோர் பேசும் சபையில் ஒரு எழுத்தாளனை அழைத்து சிறப்புரை ஆற்றச் சொல்லும் அளவுக்கு தேவகோட்டையில் யாருக்கு தைரியம் என்று தெரியவில்லை.  இருந்தாலும் எல்லா இடங்களிலும் எனக்கு ஒரே பேச்சுதான்.  மதுரை நண்பர்களுக்கு நேரம் இருந்தால் வந்து கலந்து கொள்ளலாம்.  அன்று இரவே சென்னை திரும்புகிறேன்.