வாசக சாலை ஆண்டு விழா

வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து சென்ற என் வாரிசுகளான ஞான பாஸ்கர் ராஜா, பார்த்திபன், கார்த்திகேயன், மனோஜ், அருண் ஆகியோர் மற்ற சில நண்பர்களுடன் சேர்ந்து வாசக சாலை என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் இலக்கியச் சந்திப்புகளை நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.  வாசகசாலையின் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.  நானும் பங்கேற்கிறேன், பார்வையாளனாக.  அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா போன்ற நண்பர்கள் உரையாற்றுகிறார்கள்.

வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள்

நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த மெயிலுடன் இணைத்துள்ளேன்.

வாசகசாலை பற்றிய என் இரண்டு நிமிடப் பேச்சின் you tube link , நிகழ்விற்கான அழைப்பிதழ் ஆகியவை இத்துடன் உள்ளன.  வாசக சாலை பற்றிய கார்த்திகேயன் அனுப்பியுள்ள ஒரு குறிப்பு:

வாசிப்பின் வழி ஒன்றிணைந்த நண்பர்கள் புத்தங்களை பற்றிப் பேச விவாதிக்க என 2012-ல்  தொடங்கிய “வாசகசாலை”முகநூல் குழுமம், சென்ற வருடம் டிசம்பர் முதல் மாதம் ஒருமுறை ஒரு புத்தகம் பற்றிய கலந்துரையாலை ஏற்பாடு செய்து எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதோடு, படைப்பு பற்றிய நல்ல பல விவாதங்கள் நடப்பதற்கான களமாகவும் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு வகையான புத்தக வாசிப்பை பிரதான நோக்காக கொண்டு திரு.சுதாகர் கஸ்தூரி எழுதிய 7.83 ஹெர்ட்ஸ் என்னும் அறிவியல் நாவலில் தொடங்கி சமகாலத்தன்மை கொண்ட, வெவ்வேறு தளங்களில் இயங்கும் அவ்வளவாக கவனிக்கப்படாத படைப்புகளுக்கும் கூட்டங்கள் நடத்தும் அதே வேளையில் “கிளாசிக் வரிசை” என்ற பெயரில் தமிழின் முன்னோடியான மூத்த படைப்பாளிகள் மற்றும் அவர்தம் படைப்புகளைப் போற்றும் வகையிலும் தனிப்பட்ட நிகழ்வுகளை  நடத்தி வரும்  “வாசகசாலை” கடந்த மே 2014-இல் நான்கு அமர்வுகளுடன் கூடிய “முழு நாள் இலக்கிய அரங்கு” ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வாசகசாலை அமைப்பின் முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாட உள்ள அதே வேளையில் 2015-ல் வெளியான படைப்புகளில் சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு என்ற மூன்று பிரிவுகளில் சிறந்த ஆக்கங்களை தேர்ந்தெடுத்து, வென்றவர்களுக்கு விருது தரும் விழாவையும், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் பள்ளி கலையரங்கத்தில், வரும் ஜனவரி, 9 ம்தேதி சனிக்கிழமை மாலை 6மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை, வாசகசாலை அமைப்பு நடத்த இருக்கிறது.

வாய்ப்பும் நேரமும் உள்ள நண்பர்கள் தவறாது இந்த இலக்கிய விழாவில் பங்கு கொள்ளுமாறு உங்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்..

என்றும் அன்புடன்,

கார்த்திகேயன்.V

வாசகசாலை

9942633833 / 9600075353

https://www.facebook.com/vasakasalai/vs invitation