ந. சிதம்பர சுப்ரமணியனின் நூல் வெளியீட்டு விழா

ந.சிதம்பர சுப்ரமணியன்

நாளை மாலை ஆறு மணிக்கு மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள  பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் உள்ள விவேகானந்தா அரங்கில் ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் என்ற நாவலின் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. மாலை ஆறு மணி.  நற்றிணை பதிப்பகம்.  இந்த நாவல் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல் இது.  தமிழ் தெரிந்த அத்தனை பேராலும் வாசிக்கப்பட வேண்டிய நாவல். முக்கியமாக பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.  தமிழ் தெரியாத குழந்தைகளுக்கு பெற்றோர் இந்த நாவலின் பகுதிகளை வாசித்துக் காட்டலாம்.  இந்த விழா டிசம்பரிலேயே நடக்க இருந்தது.  சென்னை வெள்ளத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நாளை.  அந்தப் பழைய அழைப்பிதழில் இரண்டு மூன்று இடங்களில் நா. சிதம்பர சுப்ரமணியன் என்று போட்டிருந்ததால் என் நண்பர் சுந்தரத்தை ஃபோனில் அழைத்து தவறைத் திருத்தச் சொன்னேன்.  சுந்தரம் சிதம்பர சுப்ரமணியனின் புதல்வர்களில் ஒருவர்.   நாகேஸ்வர ராவ் பூங்காவில் என்னோடு நடப்பவர்.  ஐந்தாறு ஆண்டுகளாகப் பழக்கம்.  அவரும் தவறைத் திருத்தி புதிய அழைப்பிதழை அனுப்பினார்.  பிறகு ஜனவரி 10-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அழைப்பிதழிலும் அதே தவறு.  நா. சிதம்பர சுப்ரமணியன்.  முதலில் விழாவைப் புறக்கணித்து விடலாமா என்று நினைத்தேன்.  ஆனால் பிள்ளைகள் செய்யும் தவறுக்குத் தந்தை என்ன செய்வார்?  மேலும், ந. சிதம்பர சுப்ரமணியன் என் ஆசான்களில் ஒருவர்.  அதனால் விழாவுக்கு நீங்கள் தவறாமல் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையும் இருக்கிறது.

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியது:
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/04/26/%E0%AE%A8.-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article2781091.ece