மண்ணில் தெரியுது வானம் வெளியீட்டு விழா உரை

மண்ணில் தெரியுது வானம் நாவல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு எதுவும் தயாரித்துக் கொள்ளாமல் போனேன்.  சிறப்புரை திருப்பூர் கிருஷ்ணன் என்பதால் நான் ஒரு ஐந்து நிமிடம் சம்பிரதாயமாகப் பேசலாம் என எண்ணினேன்.  ஆனால் கிருஷ்ணன் பேசி முடிக்கும் போது சாருவின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ஒரு போடு போட்டு விட்டு அமர்ந்து விட்டதால் திடீரென்று களமிறக்கப்பட்ட ஆட்டக்காரனைப் போல் ஆனேன்.  இருந்தாலும் மனசு பூராவும் மண்ணில் தெரியுது வானம் பொங்கி வழிவதால் நாற்பது நிமிடங்கள் தங்குதடையில்லாமல் பேசினேன்.  அந்தப் பேச்சின் காணொளியை இணைக்கிறேன்.  நண்பர்களே, நான் மதுவுக்கு எதிரி அல்ல.  நல்ல மது ஒரு அற்புதமான கொண்டாட்டம். ஆனால் நான் மது அருந்துவதை நிறுத்திய பிறகுதான் என்னுடைய உணர்வுகள் கூர்மையடைந்திருப்பதாக உணர்கிறேன்.  அதனால் இதை உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.  ஆனால் மதுவுக்குப் பதிலாக, அதை ஈடு செய்வதான கொண்டாட்டம் என்ன என்று கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.  புத்தாண்டு அன்று நண்பர்கள் மது அருந்திக் கொண்டாடி விட்டு உறங்கிக் கொண்டிருந்த போது நான் வர்கலா கடற்கரையில் நீண்ட நேரம் தியானத்தில் இருந்தேன்.  பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் தியானத்தில் இருந்ததை பிறகுதான் கவனித்தேன்.

எனது உரைகளைப் பதிவு செய்து தரும் ஷ்ருதி டிவி நிறுவனத்தினருக்கு என் அன்பும் நன்றியும்.

திருப்பூர் கிருஷ்ணனின் உரை: