கோபி கிருஷ்ணன் – பழுப்பு நிறப் பக்கங்கள்

பழுப்பு நிறப் பக்கங்களுக்கு தினமணியின் பார்த்தசாரதி, ச.ந. கண்ணன், உமா ஷக்தி ஆகிய மூவரும் கொடுத்து வரும் ஊக்கம் எனக்குப் பெரிதும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.  அவர்களுக்கும் இந்தப் பத்திக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து உதவும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.  ஃபெப்ருவரி 27 (சனிக்கிழமை) வெளியீட்டு விழாவை மறந்து விடாதீர்கள்.  மாலை ஆறரை மணி.  ராஜா அண்ணாமலை மன்றம், ப்ராட்வே (எஸ்பிளனேட்), பல் மருத்துவக் கல்லூரி அருகில், ஃபோர்ட் ரயில்நிலையம் எதிரே.  திருப்பூர் கிருஷ்ணன், எடிட்டர் லெனின், சமஸ், மனுஷ்ய புத்திரன், பத்ரி ஆகியோருடன் அடியேன்.

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/01/31/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/article3253012.ece

பின்வருவது ச.ந. கண்ணனின் கடிதம்:

சார்,

கடைசி அத்தியாயமும் அருமை.

டேபிள் டென்னிஸ் என்கிற வார்த்தையைக் கேட்டால் இனி கோபி கிருஷ்ணனும்
நீங்களும்தான் நினைவுக்கு வருவீர்கள். அவருடைய வாழ்க்கையையும் அவர்
எழுத்தின் தரத்தையும் மனத்தில் பதிய வைத்ததற்கு மிக்க நன்றி சார்.

இந்தத் தொடரின் தாக்கத்தால் இப்போதெல்லாம் கன்னிமாராவில் பழுப்பு நிற
நாயகர்களின் புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வருகிறேன். நீங்கள்
எழுதிய கநாசு கட்டுரைகளைப் படித்தபிறகே இந்த மாற்றம். நான் ஓரளவு
வாசிப்பேன். உங்களுடைய கநாசு கட்டுரைகளைப் படித்தபிறகு மாங்கு மாங்கு
என்று இப்போது படித்து வருகிறேன்.

தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எத்தனையோ பேர் பலவிதமாகப் பதிவு
செய்திருக்கலாம். ஆனால் காலம் கடந்து நிற்கப் போவது பழுப்பு நிறப்
பக்கங்கள்தான்.

நன்றி

ச.ந. கண்ணன்

http://sanakannan.blogspot.com/