விழா பதிவுகள் – 1

முகநூலில் வாசகர் வட்ட நண்பர் கணேஷ் ராம் எழுதிய பதிவு:

இலக்கியம் என்றாலே தலைவன் தலைவியை பார்த்துப் பாடுவதென்றும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை என்று வினாத்தாளில் சாய்ஸில் விடக்கூடிய படிப்பாகவும் நினைத்து ‘டர்’ராகித் தெறித்து ஓடிய இளைஞர்களை குழந்தைகள் போன்று பாவித்து, அழகாக கை பிடித்து அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியவர் சாரு. போய் அவரிடம் கேட்டுப் பாருங்கள்… என் பிள்ளைகள் என்றுதான் தனது வாசகர்களைச் சொல்வார்.

இன்று சனிக்கிழமை கொண்டாட்டங்களுக்கு நடுவே ஒருபுறம் ‘இளையராஜா 1000’ ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்துகொண்டிருக்கிறது, தொலைக்காட்சியில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட், திரையரங்கில் ‘த ரெவெனெண்ட்’ ரிலீஸாகி அதகளம் செய்துகொண்டிருக்கிறது, டாஸ்மாக் பாரில் ஃப்ரெஷ்ஷாக சைட் டிஷ், என எல்லாவற்றையும் தாண்டி இன்று ராஜா அண்ணாமலை மன்றம் இளைஞர் கூட்டத்தால் நிரம்பியது! இதுதான் சாரு என்கிற தனிமனிதன் ஏற்படுத்திய சமுதாய மாற்றம்!!! இதற்கு முன்பு ஜெயகாந்தனுக்கு இப்படிப்பட்ட fanatics இருந்ததாக மேடையில் பேசிய சமஸ் சொன்னார். நான் பார்த்ததில்லை… எனக்கு என்னைப் போன்றோருக்கு சுஜாதா, ஜெயகாந்தன், போர்ஹேஸ், அலேயோ கார்ப்பெந்தியே, தாஸ்தாவெய்ஸ்கி என்று எல்லாமே சாருதான்!!! வீ லவ் யூ சாரு… யூ ராக்!!!