வாசகர் வட்டம் பற்றி…

சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் உறுப்பினர்கள் 2500 பேர் இருந்தார்கள்.  அவர்களில் சிலர் அல்லது பலர் என் எழுத்தை அடியோடு வெறுப்பவர்கள் என்று தெரிகிறது.  அம்மாதிரி ஆசாமிகள் ஏன் வாசகர் வட்டத்தில் வந்து சேர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  எனவே என் எழுத்தை விரும்புகின்றவர்களை மட்டுமே இனிமேல் வட்டத்தில் சேர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  திட்டுபவர்கள் தங்கள் முகநூல் சுவரில் திட்டிக் கொள்ளட்டும்.  என் வாசகர் வட்டம் என்பது என் வீட்டின் உள் அறை போன்றது.  அங்கே இனிமேல் வெறுப்பாளர்களுக்கு இடம் இல்லை.  2500-இல் 2400 பேரை வட்டத்திலிருந்து நீக்கச் சொல்லி விட்டேன்.  மீண்டும் நீங்கள் வட்டத்தில் வேண்டுகோள் அனுப்பி சேர்ந்து கொள்ளலாம்.  ஆனால் நான் உங்களோடு பேசிய பின்னரே அது சாத்தியம்.  வாசகர் வட்டம் என்பது சர்வதேச இலக்கியம், சர்வ தேச இசை, நல்ல சினிமா போன்றவற்றை ரசித்துக் கொண்டாடுவதற்கான களன்.  அடிப்படையான தகுதி, என் எழுத்தின் பால் விருப்பம் இருக்க வேண்டும்.  மேலும், ராஸ லீலா, எக்ஸைல் இரண்டையும் வாசித்திருக்க வேண்டும்.  இல்லாதவர்களுக்கு வட்டத்தில் இடம் இல்லை.  ஏனென்றால், என்னோடு உரையாட விரும்புகின்றவர்கள் என் எழுத்தை வாசித்திருக்கவில்லை என்றால் அப்புறம் அதில் அர்த்தமே இல்லை.

தொடர்புக்கு:

charu.nivedita.india@gmail.com

Comments are closed.