இமாலயப் பயணம்

பல நண்பர்கள் அக்கறையுடன் விசாரித்தார்கள்.  பல நண்பர்கள் எங்களின் இமாலயப் பயணத்தை ஒத்தி வைக்கச் சொன்னார்கள்.  உத்தர்காண்டில் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மழை, பூகம்பம், வெள்ளம் தான் நண்பர்களின் இந்த பயத்துக்குக் காரணம்.  ஆனால் நாங்கள் செல்வது பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலப் பகுதி.  அங்கே பிரச்சினை இல்லை.  இருந்தாலும் ஹிமாச்சல் பிரதேஷ் அரசு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சிம்லாவிலிருந்து காஸா , காஸாவிலிருந்து கல்பா என்ற திட்டம் மட்டும் கைவிடப் படுகிறது. எனவே, இப்போதைய பயணத் திட்டம் இப்படி இருக்கும்:
சண்டிகர் – சிம்லா – மணாலி – கேலாங்

 

 கெலாங்க் – லே – லடாக் – கார்கில் – ஶ்ரீ நகர்.

வரும் 24-ஆம் தேதி கிளம்பி ஆகஸ்ட் ஆறாம் தேதி திரும்புகிறோம். 

ஒரு நண்பர் எனக்காக லெதர் கோட், கையுறை ஆகிய சாதனங்களைக் கொடுத்தார். அவர் தாஷ்கண்ட்டுக்குப் (ஊரின் பெயரே எவ்வளவு செக்ஸியாக இருக்கிறது!) போகும் போது வாங்கியதாம். பூட்ஸுக்கும், தெர்மல் wear க்கும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பயணம் செய்யும் அன்பர்கள் கீழ்க்கண்ட பொருட்களை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளவும்.

க்ரோஸின்

வாலினோ ஜெல்.

Lip guard (இது மிக மிக அவசியம்; இது இல்லாவிட்டால் உதடுகள் வெடித்து விடும்.  அது மிகக் கொடூரமான வலியைக் கொடுக்கும்.  லிப் கார்ட் போட்டுக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது)

B Complex tablets

Electoral

Betadine

Disposable plates

Disposable glasses

Disposable spoons

வெந்நீர் ஊற்றியதும் சாப்பிடுவதைப் போன்ற கப் நூடுல்ஸ்.  ஏனென்றால் சில இடங்களில் கொலைப்பசி எடுக்கும்.  ஆனால் சாப்பாடு கிடைக்காது.

தீப்பெட்டிகள்

மோட்டார் பைக்கில் வருபவர்களுக்கு என்னென்ன தேவை என்று எனக்குத் தெரியாது.

எல்லாவற்றையும் அராத்து பார்த்துக் கொள்வார் கருப்பசாமி பார்த்துக் கொள்வார் என்று கையை வீசிக் கொண்டு வந்தால் அப்படியே வைஷ்ணவோ தேவி அம்மாவிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்.  

15 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் சென்ற போது கூட வந்த ஒரு நண்பர் எப்போது பார்த்தாலும் சோறு தான் வேண்டும் என்று டார்ச்சர் செய்து கொண்டிருந்ததால் அவரை வைஷ்ணவோ தேவி மலைக் கோவிலில் ஒரு பெரிய பனி மூட்டம் வந்து நண்பரைப் பிரிந்து நான் அறைக்கு வந்து விட்டேன். நண்பருக்கு ஒரு வார்த்தை கூட இந்தி தெரியாது.  கையிலும் பணம் இல்லை.  இருந்தாலும் எப்படியோ அறைக்கு வந்து சேர்ந்தார்.

Comments are closed.