ராஸ லீலா – விமர்சனக் கூட்டம்

fb-cover8

நண்பர்களே, வரும் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு ராஸ லீலா பற்றிய கூட்டம் நடைபெறுகிறது. பேசுபவர்: அழகிய சிங்கர். தலைமை: ரவி தமிழ்வாணன். கூட்டம் மிகச் சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்து விடும். தேநீர் நேரம் 5.45. ரவி தமிழ்வாணன் நேரம் கடைப்பிடிப்பதில் ராணுவ ஒழுங்குக்குப் பேர் போனவர். TAG கூட்டங்கள் அனைத்துமே மிகச் சரியான நேரத்தில் ஆரம்பித்து எட்டு மணிக்கு முடிந்து விடும் என்று அறிகிறேன். இந்த ஆண்டு என்னுடைய புத்தக வெளியீட்டு விழா எதுவும் இருக்காது. புத்தகம் வரும். விழா இருக்காது. நாலு லட்சம் செலவு செய்து ஒரு லட்சம் ராயல்டி (சரியாக ஒரு லட்சத்து இருபது ஆயிரம்) வாங்கும் இழிநிலைக்கு விழாவெல்லாம் அவசியமா என்ற கேள்வியே காரணம். இந்தச் சந்திப்பையே இந்த ஆண்டுக்கான என்னுடைய வாசகர் சந்திப்பாகவும் கொள்ளலாம். இனிமேல் அதிகமாக விழாக்களிலோ, புத்தக வெளியீட்டு நிகழ்வுகளிலோ, வாசகர் சந்திப்புகளிலோ கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். காரணம், வேலை நிறைய இருக்கிறது. ஆங்கிலத்தில் நாவல்கள் வராமல், ப்ரஸீல் சீலே போகாமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பதற்கு மனம் இல்லை. அவ்வளவுதான் விஷயம். கொண்டாட்டங்கள் ஒரு ஆண்டு காத்திருக்கட்டும். இப்போது வேலை, வேலை, வேலை. 25-ஆம் தேதி செவ்வாய் மாலை சந்திப்போம். ஐந்தே முக்காலுக்கு தேநீர். ஆறரைக்குக் கூட்டம்.

Date: Tuesday, 25th October , 2016, Time: 5.45 p.m. to 8.00 p.m

Venue: Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana Sabha), Chennai 600018

Book of the Month: ‘Raasaleela’ a book by Charu Nivedita

Reviewer: Azhagiasingar

5.45 p.m. to 6.30 p.m. High Tea

6.30 p.m. to 6.45 p.m. Prayer song followed by Welcome by Ravi Tamizhvanan

6.45 p.m. to 7.15 p.m. Review of the book ‘Raasaleela’ by Azhagiasingar

7.15 p.m. to 7.55 p.m. Author`s response followed by answers to selected

questions from the audience by the author Charu Nivedita

7.55 p.m. to 8.00 p.m. Vote of thanks by Charukesi

***

போஸ்டர் வடிவமைப்பு: சுப்ரமணியன்