தி இந்து தீபாவளி மலர்

தி இந்து நாளிதழின் தீபாவளி மலரில் ஃப்ரெஞ்ச் சினிமாவும் அதன் தாக்கமும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன். சினிமா பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் இது முக்கியமானது. அதிகம் நான் ஃப்ரெஞ்ச் சினிமா பற்றி எழுதியதில்லை. இதுதான் முதல். மிக நீளமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கட்டுரை. பக்க அளவு கருதி குறைத்து விட்டேன். பத்திரிகைகள் நிர்ணயிக்கும் அளவை மீறி ஒரு வார்த்தை கூட எழுதுவது எனக்குப் பழக்கம் இல்லை. ஆனால் பார்த்தால் செழியனின் ஈரான் சினிமா பற்றிய கட்டுரை என் கட்டுரையை விட இரண்டு மடங்கு நீளமாக உள்ளது. மை காட். நாமும் பக்க நிர்ணயத்தைப் பற்றிக் கவலையே படாமல் எழுதியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. நேரம் கிடைத்தால் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக வேறு ஒன்று எழுதலாம். ஆனால் இப்படியே கட்டுரை கட்டுரையாக எழுதிக் காலத்தைத் தொலைப்பதிலும் மனம் ஒப்ப மாட்டேன் என்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நாவலை வேறு முடிக்க வேண்டும்.

தி இந்து தீபாவளி மலரைப் பாருங்கள். ஃப்ரெஞ்ச் சினிமா பற்றிய என் கட்டுரைக்கு உங்கள் எதிர்வினைகளை எதிர்பார்க்கிறேன். 15 நாட்கள் அமர்ந்து ஃப்ரெஞ்ச் சினிமாக்களை மீண்டும் பார்த்து எழுதிய கட்டுரை அது.