சாரு..இசையைரசியுங்கள்…வேண்டாம்என்றுசொல்லவில்லை.. ஆனால்தயவுசெய்துஇப்படிபகிராதீர்கள்… நீங்கள்செய்வதைஎல்லாம்தானும்செய்ய முயன்றுபார்க்கும்உங்கள்தலைமைச்சீடரான உத்தமத் தமிழ் எழுத்தாளர், இமயமலைப்பயணம்மேற்கொள்ளபோகிறாராம்…அதுஅவரது தனிப்பட்ட விஷயம்… பரவாயில்லை.. ஆனால்இசையைப்பற்றிநீங்கள்எழுதவதைப்பார்த்து , அவரும்இசைகளின்வழியேஎன்றோஅல்லது இசையின்ஊடாகதத்துவதரிசனம்என்றோஎழுதஆரம்பித்தால்தமிழகம்தாங்காது…
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சை,
என்னுடைய தலைமைச் சீடரை நான் அங்கீகரிக்கவில்லை. சகுனி யாரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். உ.த.எ.வுக்கு இயங்கு சக்தியாக இருப்பதே என் எழுத்தும் செயலும்தான் என்கிற போது சந்தோஷம்தான் ஏற்படுகிறது. ஆனால் பரிதாபமும் ஏற்படுகிறது. என்னென்னவோ கண்றாவி கதைகளைப் படித்துக் கொண்டு, எங்கெங்கோ போய் தங்கியதற்கான அறை வாடகை கூட கொடுக்காமல் வாசகர்களைச் சந்தித்து, உரையாற்றி, பெரியவர்களைப் பார்த்து நமஸ்காரம் சொல்லி, முதியவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடத்தி… ம்… எழுத்தைத் தவிர வேறு எல்லாவற்றையும் செய்து தொலைக்க வேண்டியிருக்கிறது அவருக்கு. இப்போது என்னைப் பார்த்து இமயமலைப் பயணம் வேறு. கொடுமை… கொடுமை…
என் பக்கத்து வீட்டுக்காரருக்கும் உ.த.எ.வுக்கும் நிரம்ப ஒற்றுமை உள்ளது. நான் இமயமலைக்குப் போய் வந்ததும் உ.த.எ.வைப் போலவே அவரும் கிளம்பி விட்டார். எப்படிப் போகிறீர்கள் என்று கேட்டேன். டெல்லிக்கு ஏரோப்ளேன். அப்பால ஸ்ரீநகர்… அங்கேர்ந்து கார்கில், லே, லடாக். அப்பாலெ லடாக்லேர்ந்து சென்னை என்றார். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன்.
அதாவது, தமிழ்நாடு பற்றி எதுவும் தெரியாத ஒருவர் “நான் திருச்சி, தமிழ்நாடு எல்லாம் போறேன்” என்று சொல்வது போலத்தான் லே, லடாக் என்பதும். லடாக் என்பது ஒரு பிராந்தியம். ஜம்மு & காஷ்மீரில் லடாக் என்பது ஒரு பகுதி. அங்கே தான் திபெத்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் புத்தமதத்தினர். இந்தப் பகுதியில் முஸ்லீம்களை அரிதாகவே பார்க்கலாம். கார்கில் மட்டுமே விதிவிலக்கு. லடாக்குக்குப் போனால் ஏதோ திபெத்துக்கே வந்து விட்டது போல் இருக்கிறது. அசைவ உணவு கூட கிடைக்க மாட்டேன் என்கிறது. வெறும் நூடுல்ஸும், சோறும் பருப்பும், மோமோவும் மட்டும்தான். நாங்கள் நொந்து நூடுல்ஸாகி விட்டோம். ஆம்லெட் மட்டுமே கிடைக்கிறது. முட்டையை லடாக்கில் சைவத்தில் சேர்த்து விட்டார்கள். கடும் சைவர்களான புத்த பிக்குகளும் முட்டை சாப்பிடுகிறார்கள்.
என் அண்டை வீட்டுக்காரர் இன்னொன்றும் சொன்னார். நான் ஆறு மாசம் முந்தியே ப்ளான் பண்ணிட்டேன். பாதை திறப்பதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.
அடப்பாவி என்று நினைத்துக் கொண்டேன். பதில் சொல்லவில்லை. பாதை திறந்து ஐந்து மாதம் ஆகிறது. இதோ அடுத்த மாதம் பாதையே மூடப் போகிறார்கள். அதுதான் நிஜம்.
இன்னொன்று. தில்லியிலிருந்து ஸ்ரீநகர், அங்கிருந்து கார்கில் எல்லாம் 80, 90 வயதுக் கிழவர்கள் செல்லும் வழி. பஸ்ஸிலேயே போய் வந்து விடலாம். ஆபத்து எதுவும் இல்லை. மணாலியிலிருந்து லே போவதுதான் மரணப் பாதை. இந்த மரணப் பாதையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே குழுவில் இருக்கலாம். அண்ணனும் தம்பியும் சேர்ந்து பயணிக்க முடியாது. ஏன் என்று சொல்லவா? அல்லது புரிகிறதா? சார்ச்சுவில் இரவு உறங்கினால் மறுநாள் அந்த நபர் கண் விழிப்பாரா அல்லது மேலே போய் விடுவாரா என்றே சொல்ல முடியாது. நாங்கள் 12 பேர் சார்ச்சுவில் இரவு தங்கினோம்.
சிலருக்கு மூச்சு விட முடியவில்லை. சிலருக்குத் தலைவலி சம்மட்டி அடி போல் இருந்தது. சிலர் வாந்தி எடுத்தபடியே இருந்தனர். சிலர் பைத்தியம் பிடித்தது போல் சிரித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் நாங்கள் உயிரோடு திரும்பி விட்டோம்.
உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் அம்மா, 12 பேரும் 12 பேராகத் திரும்பி வர வேண்டும் தாயே என்றுதான் மாசாணி அம்மனிடம் வேண்டிக் கொண்டு வந்தேன்.
இன்னும் நான் சொல்லியிருந்த விஷயங்களை நண்பர்கள் கடைப்பிடித்து இருந்தால் வாந்தி, தலைவலி, மயக்கம் மற்றும் இன்னோரன்ன உடல் உபாதைகளிலிருந்தும் தப்பி இருக்கலாம். பழனிவேலைத் தவிர வேறு யாருமே அதைப் பின்பற்றவில்லை. விபரமாக பிறகு எழுதுகிறேன்.
நாங்கள் சென்ற மணாலி – லே வழியை Off road என்கிறார்கள். சாலையே இருக்காது. வெறும் பாறைக் கற்களும் water crossing-உம் தான். இதில் தான் நான்கு பேர் மோட்டார் பைக்கில் சென்றோம். எனக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. அராத்துவின் பைக்கில் தொற்றிக் கொண்டேன். இந்த வழியிலும் லே நகரிலும் இந்தியர் ஒருவரைக் கூட 60 வயதில் நான் பார்க்கவில்லை. எல்லோருமே 30 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். நான் மட்டுமே 60. எங்கள் 12 பேர் குழுவிலும் நான் மட்டுமே அதிக உடல்தகுதியுடன் இருந்தேன். நான் ஒன்றும் சூப்பர் மேன் கிடையாது. சைக்கிள் விடுவதற்குக் கூட அச்சம் கொள்ளும் ஒரு சராசரி மனிதன். நான் என்ன செய்தேனோ அதை நீங்கள் செய்தால் 70 வயதில் கூட நான் சென்ற மரணப் பாதையில் ஜாலியாகச் சென்று வரலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களைக் காண முடிந்தால் அவர்கள் ஐரோப்பியர்களாக இருந்தனர். 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு இந்தியனைக் கூட இந்தப் பயணத்தில் இமயமலையில் நான் பார்க்கவில்லை. இது பற்றியே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
காலையில் இஞ்சி, இரவில் கடுக்காய். இதில் முதலாவதை மட்டும் நான் இமயமலையில் இருந்த இரண்டு வாரமும் பின்பற்றினேன். கடுக்காய் கூட சில தினங்கள் சாப்பிட்டேன். மற்ற நாட்களில் முடியவில்லை. ஆனால் தினமும் காலையில் ஆறு மணிக்கு இஞ்சியை கத்தியால் தோல் உரித்துக் கொடுப்பார் பழனிவேல். நானும் அவரும் சாப்பிடுவோம். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அப்படியே விழித்துக் கொண்டிருந்தாலும் தங்களுக்கு இது எதுவுமே சம்பந்தம் இல்லாதது போல் வேடிக்கை பார்ப்பார்கள். நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்? மிக்ஸியில் அடித்து சாறாகக் குடித்தால் ஒரே மடக்கில் குடித்து விடலாம். ஆனால் இமயமலையில் மிக்ஸிக்கும் மின்சாரத்துக்கும் எங்கே போவது? நர நர என்று இஞ்சியைக் கடித்தே சாப்பிடுவேன். காலங்காலையில். இதுதான் என் உடல்நிலையை சரியாக வைத்திருந்தது.
மணாலியிலேயே சொல்லி விட்டார்கள், நிறைய பூண்டு சாப்பிடுங்கள் என்று. ஏதோ சாக்லெட் கொடுப்பது போல் பூண்டை நம் கையில் திணிக்கிறார்கள். பூண்டு தின்றால் 18,000 அடி உயரத்தில் தலை வலிக்காது, மூச்சு சிரமம் இருக்காது. முக்கியமாக, உயிர் பத்திரமாக இருக்கும். பூண்டை அவித்து அந்தத் தண்ணீரை தேநீர் மாதிரி குடிக்கக் கொடுக்கிறார்கள்.
உ.த.எ.வும் சீடர்களும் போயிருப்பது ஸ்ரீநர், கார்கில், லே, லடாக்(!) இன்பச் சுற்றுலா. லடாக் ஏர்போர்ட்டிலிருந்தே டைரக்டாக நாகர்கோவிலுக்கு ஃப்ளைட் உண்டு என்று கூட கேள்விப்பட்டேன். இந்த இன்பச் சுற்றுலாவுக்கும் இமயமலைக்கும் சம்பந்தம் இல்லை. புகைப்படங்கள்: கூடாரம் சார்ச்சு
Comments are closed.