பிக் பாஸ் – சினிமாக்காரர்களின் திமிர்த்தனம் : அராத்து

 

சில எபிசோட்கள் பார்த்தேன். ஊரோடு த்து வாழ வேண்டியுள்ளதே !

முதலில் ஏன் ஒருவரைத் தவிர எல்லோரையும் சினிமா சம்மந்தப்பட்டவர்களாகவே தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.

இது ரியாலிட்டி ஷோ அல்ல , ஸ்க்ரிப்ட் படிதான் நடக்கிறது என்ற குற்றச்சாட்டும் காணக்கிடைக்கிறது.

ஸ்கிரிப்ட் ஆக இருந்தாலுமே , சினிமாக்காரர்களின் திமிர்த்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.

ஜூலியை , ஆர்த்தியும் , காயத்திரியும் நக்கல் அடித்து , கேலி செய்வது படு ஆபாசமாக இருக்கிறது.

காயத்திரியிடம் தெரிவது அசட்டு பிராமணத் திமிர். அதில் சினிமாத் திமிரும் சேர்ந்து கொண்டது.

ஆர்த்தி பிராமணரா என்று தெரியவில்லை. ஆனால் இவரை சினிமாவில் பார்த்து வெள்ளந்தி என நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆக சின்ன புத்தி கொண்ட பஜ்ஜாரியாக இருக்கிறார் ( பஜ்ஜாரி பொலிட்டிக்கல் கரக்ட்னஸ் இல்லாத வார்த்தையா ?)

எதை மிஸ் செய்றே , ஏன் நர்ஸ் வேலையை விட்டுட்டு வந்த ? என்று வேண்டுமென்றே தூண்டி விட்டு , குடிநீர் குழாய் சண்டைக்காரி ஆகிறார்.இதுக்கு காயத்திரியும் ஏதோ ராணுவ தலைமை அதிகாரி போல ஒத்து ஊதுகிறார்.

ஏம்மா ,ஜூலிதான் நர்ஸ் வேலையை விட்டுட்டு வந்திச்சி . நீங்கள்ளாம் எதை விட்டுட்டு ஏன் வந்தீங்க ?

இந்த ப்ரோக்ராமில் கலந்து கொண்டு இருக்கும் “ஆர்டிஸ்டுகள்” எல்லாம் மார்க்கெட் போன அரை வேக்காட்டு வெத்து வேட்டுக்கள். இவர்களுக்கு எவ்வளவு திமிர் ?

ஜூலி பொது சேவை செய்யணுமாம். நர்ஸ் வேலையை விட்டுட்டு வீஜே ஆகக்கூடாதாம்.

இதுங்கள்ளாம் கர்ப்பத்திலேயே ஆர்டிஸ்டுகள் போல.

ஜூலியாவது 15 ஆயிரம் தான் எனக்கு சம்பளம் ,பணம் சம்பாதிக்க வந்தேன் என்று கூறுகிறார்.

நீங்க எல்லாம் எதுக்கும்மா வந்தீங்க ? பிக் பாஸ்ல ஜெயிச்சா , எதாவது சாரிடிக்கு குடுத்துடுவீங்களா ? பெரிய பணக்காரங்க தான நீங்க ?

இதை வெறும் வெளுப்பு கலர் சார்ந்த ஜாதித் திமிர் என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. கருப்புத் தோல் கஞ்சா கருப்புவின் திமிர் இவர்களுக்கு சற்றும் குறைந்ததில்லை. ஆர்டிஸ்டுக்கு மரியாதை குடுக்கணுமாம். அப்ப நர்ஸ் எல்லாம் மரியாதை கெட்ட ஜென்மமா ?

இவர பரணியை அடிக்க போனபோது , பரணி செவுளில் ஒன்று விட்டிருக்க வேண்டும்.

ஷக்திக்கும் இந்த திமிர் உள்ளது.

ஓவியா சிம்பிள் அண்ட் கேஷுவல் . கூல் கேர்ள். ஜூலியுடன் எந்த கிரீடமும் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல பழகுகிறார்.

நமீதாவுக்கும் மைல்ட் திமிர் .

கணேஷ் , போர்டிங்க் ஸ்கூல் யூகேஜி மாணவன்.

சிலரின் தோற்றமும் , பிஹேவியரும் இர்ரிடேட்டிங்காக இருக்கும். பாவம் அப்படி மாட்டியவர் பரணி.

மற்றபடி ஆரார், ராய்சா என சொல்கிறார்கள். இவர்களெல்லாம் யாரென்றே தெரியவில்லை. கேரக்டர்லெஸ் பீப்பிள்ஸ்.

இதுங்களையெல்லாம் பார்க்கும்போது , நடிப்பு தான் என்றாலும் , ரஜினி எளிமையாக நடிப்பதே சிரமம் தான் , பாராட்டுக்குரியதுதான்.

சிநேகன்?

அந்தாள சேனலோட வேலைக்காரர்னு நினைச்சேன்.