பிக் பாஸ்

நேற்று பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். விமானத்திலும் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த போதும் பிக் பாஸ் போடவில்லை. இப்படி பார்க்க முடியாமல் போகும் எபிசோடுகளை மறுநாள் யூட்யூபில் பார்க்கும் வசதியும் இல்லை. இன்று காலைதான் கேள்விப்பட்டேன், ஓவியா மழையில் நடனம் ஆடினார் என்று. கவிஞர் சினேகனையும் ஆட அழைத்ததாகவும் அவர் ஏற்கனவே நான் குளித்து விட்டேனே என்று மறுத்ததாகவும் அறிந்தேன். அடப் பாவி, மழையையும் மங்கையையும் மறுக்கத் துணியும் இவரெல்லாம் ஒரு கவிஞரா? அல்லது, மனைவிக்கு பயமா? பிக் பாஸுக்கு அடிக்ட் ஆகிக் கொண்டிருக்கிறேன். ஓவியாவும் கணேஷும் தான் செம கூல். ஓவியா வெளியே வந்ததும் டென் டௌனிங்கில் அவரோடு ஒரு ஸால்ஸா ஆட்டம் போட வேண்டும்.