கண்ணுக்குட்டிங்களா, சிறுத்தை சிவா குடுத்த மன உளைச்சல்ல ஒரு முக்கியமான பாய்ண்ட்டை மிஸ் பண்ணிட்டேம்பா. அஜித் சர்வதேச பயங்கரவாதியைப் பிடிக்கச் செல்கிறார். உயிரோடு வருவாரா இல்லையான்னு தெரியாது. மனைவி காஜலுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறார். எங்கே? நெற்றியின் மேலே வகிடு எடுக்கும் இடத்தில். அதிலும் உதடு படாமல். அடக்கடவுளே, சிறுத்தை சிவா, இப்படியா அஜித்தை நீங்கள் பழிவாங்குவீர்கள் என்று உள்ளுக்குள் கதறினேன். கமல் படம் பார்த்ததே இல்லையா சிவா?!