விவேகம் பற்றிய விவாதங்கள்

Short form of BLUE SATTAI is BS – BULL SHIT! I haven’t seen Vivegam yet – but the way he expressed about VIVEGAM should not be called as a REVIEW at all. Any review should use sandwich method – No one is such a fool to invest two years of hard work, resources, money to be ridiculed like that. You start with positives – Go to negatives and end with a positive note. These kind of trash talks can be given to any movie …including cult classics like Coppola’s GOD FATHER. There is room for improvement in any art form. Be nice to artists – they do sacrifice a lot for their craft. If you encourage these kind of reviews, you are encouraging NEGATIVITY and NEGATIVE PEOPLE.

Hereby, I register my condemnation towards the way he expressed ‘his’ opinion on the movie and I don’t think this is such a nice way to critique ‘any’ film for that matter!

As a movie fan, I am very disappointed with the attitude and the way he talked about the film. Am very positive that my other Journalist friends will agree to the same.

#BEPOSITIVE #SPREADLOVE #REVIEWSOTHATITHELPSFILMMAKERS

P.S:- This is nothing to do with his review on my film or anything personal. I will see #VIVEGAM Soon irrespective of what others say.

இயக்குனர் அருண் வைத்தியநாதனின் மேற்கண்ட பதிவை முகநூலில் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.  சினிமா என்ற தொழில் எத்தனை சிரமமானது என்று எனக்குத் தெரியும்.  உடலையும் மனதையும் மிகவும் வருத்தக் கூடிய தொழில்களில் சினிமாவும் ஒன்று.  சினிமா பற்றி அசோகமித்திரனும் சுஜாதாவும் அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார்கள்.  கரைந்த நிழல்கள்; கனவுத் தொழிற்சாலை.  ஆனால் அதற்காக சினிமாவை விமர்சிக்கக் கூடாது என்று சொல்வது ஃபாசிசம்.  இரண்டு ஆண்டுகள் உயிரைக் கொடுத்து எடுத்திருக்கிறார்கள்.  அது தெளிவாகத் தெரிகிறது.  அதற்காக படத்தைப் பாராட்ட வேண்டுமா?  இடைவேளை வரை படத்தில் என்ன நடக்கிறது?  அஜித் பாட்டுக்கு எல்லோரையும் சுட்டுக் கொண்டே இருக்கிறார்.  300 பேர் கொண்ட படையே அஜீத்தை வளைத்துக் கொள்கிறது.  எல்லார் கையிலும் மெஷின் கன்.  மேலே நாலைந்து ஹெலிகாப்டர்கள்.  அஜீத்தைக் கொல்ல.  யார் சுடுவதும் அஜீத் மேல் படுவதில்லை.  அவர் பாட்டுக்கு ஆற்றில் குதித்து விடுகிறார்.  குதிக்கும் போதே எல்லோரையும் சுடுகிறார்.  எல்லோரும் செத்து விழுகிறார்கள்.  என்னய்யா காதில் பூ சுற்றுகிறீர்கள்?

என்னுடைய முதல் விமர்சனம் என்பதால் சற்று குறைவாகவே சாடினேன்.  மேலும், எனக்கு அஜித் மேல் கொஞ்சம் soft corner உண்டு.  அதுவும் ஒரு காரணம்.  ஆனால் அது கூட ஒரு காட்சியில் போய் விட்டது.  அவர் பயங்கரவாதிகளைப் பிடிக்கப் போகிறார்.  திரும்பி வருவாரா இல்லையா தெரியாது.  மனைவிக்கு முத்தம் கொடுக்கிறார்.  எங்கே?  உச்சி நெற்றியில்.  மகளா மனைவியா?  இதை ப்ளூ ஷர்ட் கேட்டார்.  இதில் என்ன தவறு?

இன்னொரு விஷயம்.  பிரஷாந்தின் சினிமா விமர்சனம் சினிமா விளம்பரம் போல் உள்ளது.  கேவலம்.  பாஸ்கி என் நண்பர்.  அவர் விமர்சனம் பட்டும் படாதது போல் தொட்டும் தொடாதது போல் இருக்கிறது.  கொஞ்சம் கூடக் கடுமை இல்லை.  அவர் சினிமா உலகத்தின் உள்ளே இருப்பதால் அவருக்கு அங்கேயும் திட்டு கிடைக்கும்.  என் போன்றவர்களின் திட்டும் கிடைக்கும்.  நிச்சயமாக பாஸ்கியின் விமர்சனங்கள் மயிலிறகால் வருடுவது போல் உள்ளன.  மோசமான படம் என்றால் மயிலிறகால் கொஞ்சம் ஸ்ட்ராங்காக அடிக்கிறார்.

 

இங்கே மோடியைக் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள்.  சர்வாதிகாரத்தனமாக ஆட்சி நடத்திய ஜெயலலிதாவை விமர்சித்தோம்.  தமிழ்நாட்டில் எல்லோரையும் விமர்சிக்கலாம்.  ஆனால் சினிமாவை விமர்சித்தால் ஜெயில்.  இல்லாவிட்டால், அருண் வைத்தியநாதன் போன்ற படித்தவர்களே திட்டுவார்கள்.  என்ன நாடு இது?  சினிமா இங்கே மதம்; சினிமா நடிகன் இங்கே கடவுள்.  இப்படி ஒரு கேடுகெட்ட நாடு உலகிலேயே எங்கேயும் இருக்காது.

 

Top of Form