விவேகம் – கொலை மிரட்டல்

இன்று (26.8.2017) 1.22 மணிக்கு எனக்குத் தெரியாத நம்பரிலிருந்து ஒருவர் போன் செய்து என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆபாசமாகத் திட்டினார். விவேகம் படத்துக்கு நீ யார்ரா பு…. என்று ஆரம்பித்துத் தொடர்ந்தது வசை. கட் பண்ணி விட்டு அந்த எண்ணை ப்ளாக் செய்தேன். உடனே இரண்டு நிமிடத்தில் இன்னொரு எண்ணிலிருந்து போன் செய்து கொலை மிரட்டல் விட்டார். கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்ய எனக்கு நேரம் இல்லை. அருண் வைத்தியநாதன் போன்ற நண்பர்கள் முகநூலில் ஆலோசனை கூறியிருப்பது போல் இனிமேல் எல்லா படங்களையும் பாராட்டித்தான் பேச வேண்டும் போல் இருக்கிறது. ப்ளூ ஷர்ட் விமர்சகருக்கு எத்தனை கொலை மிரட்டல் வந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். சினிமா இங்கே மதம்.