ஒரு விளக்கம்

மதிப்பிற்குரிய………
முதலில் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நான் உங்களை எழுத்தாளரே என்று கூறியது தங்களை காயப்படுத்தி இருந்தால். உங்களை அப்படி அழைப்பதில் எனக்கொரு ஆத்ம த்ருப்தி. நடிகர் துறவி போன்றோர் வரிசையில் உங்களை நான் வைக்க எனக்கு இஷ்டமில்லை.ஒரு மன்னனை புலவரை நெருக்கமான நண்பனை எப்படி அழைப்போமோ அப்படி அழைக்கத்துணிந்தேன்.ஶ்ரீலங்கா விஷயத்தில் டிவி,பேப்பரில் வரும் விஷயங்களை நம்ப நான் தயாராக இல்லை. அது நம்பத்தகுந்தது இல்லை என்பது என்கருத்து.நான் முழுக்கநம்புவது தங்களை போன்ற முதிர்ந்த அதே சமயத்தில் யாரிடமும் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத எழுத்தாளர்களை மட்டுமே. இந்த எளியவனின் கடிதத்திற்கும் பதில் அனுப்பி அதை தங்களது ப்ளாகிலும் பதிந்தது என்னை மகிழ்வித்தது.வாசிப்பு உலகில் மெல்ல தவழ தொடங்கி இருக்கும் எனக்கு இதுவே ஒரு மணிமகுடமாக கருதுகிறேன்.பள்ளிப்படிப்பை கூட தாண்டாத எனக்கு இது ஒரு பெரியவிஷயம்.உங்களை எப்படி அழைப்பது என தெரியாமல்தான் “எழுத்தாளரே”என அழைத்தேன். மீண்டும் உங்களை எரிச்சல் படுத்தாத வார்த்தையை பயன்படுத்த முயற்சிக்கிறேன்.