1964-இல் உங்கள் வயது என்ன? அநேகமாகப் பிறந்தே இருக்க மாட்டீர்கள். அந்த ஆண்டு வந்ததுதான் சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் நாவல். வெளிவந்த போது அதிகம் பேசப்பட்டிருந்தாலும் அதற்குப் பிறகு அந்த நாவலைப் பற்றிய பேச்சே இல்லை. சா. கந்தசாமி சாகித்ய அகாதமி உட்பட பல இலக்கியப் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்றாலும் அவர் பிராமணர் அல்லாதவர் என்பதால் பிராமண எஸ்டாப்ளிஷ்மெண்ட் அவரைக் கண்டுகொள்ளவில்லை. என்னுடைய இந்த அபிப்பிராயம் தவறாகவும் இருக்கலாம். ஆனால் கந்தசாமியையும், சாயாவனத்தையும் அப்போதைய இலக்கிய விமர்சன தாதா வெங்கட் சாமிநாதன் எந்த அளவுக்குக் கீழ்மைப்படுத்தினார் என்று இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சாயாவனம் போன்ற உலகத்தரமான நாவலை 1964-இலேயே எழுதிய ஒருவரை இலக்கிய உலகம் கண்டு கொள்ளாததற்கு வேறு எந்தக் காரணத்தையும் என்னால் அனுமானிக்க முடியவில்லை.
உலகத் தரமான நாவல் மட்டும் அல்ல; சாயாவனம் போன்ற ஒரு நாவலை என்னுடைய உலக இலக்கிய வாசிப்பில் நான் கண்டதில்லை என்றே சொல்லுவேன். சுற்றுச் சூழலியல் பற்றி இப்போதுதானே பேச்சு உருவாகியிருக்கிறது? கந்தசாமி அந்த நாவலை 1964-இலேயே எழுதி விட்டார். இலக்கிய ரீதியாக மட்டும் அல்ல; அதில் உள்ள பலவிதமான விருட்சங்கள் மற்றும் பட்சிகள் பற்றியும் எக்கச்சக்கமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். அந்த அளவுக்கு அதில் விஷயம் இருக்கிறது. சாயாவனம் பற்றியும் கந்தசாமியின் மற்ற எழுத்துக்கள் பற்றியும் என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்கள் நூலில் எழுதியிருக்கிறேன்.
இது பற்றி இப்போது எழுதும் முகாந்திரம் என்னவென்றால், சென்னை சாகித்ய அகாதமி அலுவலகத்தில் நடைபெறும் Book Discussion நிகழ்வில் மே மாதம் 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை ஐந்தரை மணிக்கு சா. கந்தசாமியின் “தமிழில் சுயசரித்திரங்கள்” என்ற அருமையான புத்தகத்தைப் பற்றி அடியேன் பேச இருக்கிறேன். என் நண்பர்களும் வாசகர்களும் வந்திருந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சாகித்ய அகாதமி அலுவலகம் முகவரி:
443, இரண்டாம் தளம், குணா காம்ப்ளெக்ஸ் மெயின் பில்டிங் (பின்பகுதி)அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18.
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai