ராஸ லீலா – collectible

ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி திட்டத்துக்குப் பணம் அனுப்ப ஜூன் முதல் வாரம் வரை நீட்டிக்கச் சொல்லி சில நண்பர்கள் கேட்டுக் கொண்டுள்ளதால் அப்படியே ஜூன் முதல் வரை நீட்டிக்கிறேன். ஷார்ஜா, துபாய், குவைத் நண்பர்களில் மூன்று பேர் மட்டுமே பணம் அனுப்பி இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து இரண்டு பேர். ஆச்சரியமாக இருந்தது. என்ன ஆச்சரியம் என்றால், எனக்கு வரும் கடிதங்களைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.  என் வாழ்வையே மாற்றி அமைத்து விட்டீர்கள்; ஆஹா ஊஹூ…  ஆனால் அவர்களிடமிருந்து சந்தா/கட்டணம் என்று ஒரு பைசா வராது.  அது பற்றிக் கவலை இல்லை.  ஏன் இந்த முழ நீளப் பாராட்டுக் கடிதங்கள் என்பதுதான் ஆச்சரியம். 

ஆனால் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புகிறார்.  வேண்டாம் தம்பி என்றேன்.  வீட்டில் எல்லோரும் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் என்று மாதாமாதம் பணம் கட்டுகிறார்கள்; என் வாழ்வில் எனக்கென்று நான் ஐநூறு ரூபாய் செலவு செய்யக் கூடாதா என்று கேட்கிறார். 

ராஸ லீலா கலெக்டிபிளின் விலை ரூ.10,000/- இதன் மதிப்பு இப்போது தெரியாது. சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனாலே இந்தப் பிரதியின் மதிப்பு தெரிய வந்து விடும். நெப்போலியன் காலத்தில் தயாரிக்கப்பட்ட கோனியாக் இப்போதும் கிடைக்கிறது. விலை இரண்டரை லட்சம் ரூபாய்.

’கலெக்டிபிள்’ என்றால் அதன் பின் அட்டையில் ராஸ லீலாவின் அந்தப் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் நானும் சேர்ந்த புகைப்படம் இடம் பெறும். அதாவது, ஒவ்வொரு பிரதியையும் தனித்தனியே அச்சடிக்க வேண்டும். கிட்டத்தட்ட handmade காஷ்மீர் கம்பளம் மாதிரி. மட்டுமல்லாமல், புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்த காப்பியை நான் யாருக்குக் கொடுத்திருக்கிறேனோ அவரைப் பற்றிய என்னுடைய சிறு குறிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கணேஷ் அன்புவின் பிரதி என்றால் அந்தப் பிரதியின் பின்னட்டையில் கணேஷ் அன்புவும் நானும் உள்ள புகைப்படம் இருக்கும். முதல் பக்கத்தில் கணேஷ் அன்பு பற்றி நான் எழுதிய குறிப்பு ஒன்றும் இருக்கும். ஒரு காப்பியின் தயாரிப்புச் செலவே 2000 ரூபாய் ஆகும். எனவே யார்யாரால் முடிகிறதோ அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  ஜூன் ஏழாம் தேதியுடன் இத்திட்டம் முடிவுக்கு வருகிறது. இல்லாவிட்டால் புத்தகம் கிடைக்க நீண்ட நாள் ஆகும். அநேகமாக உலக அளவில் புத்தகத் தயாரிப்பில் இப்படி ஒரு collector’s copy தயாரிக்கப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

எனவே முடிந்தவரை ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி திட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். ஒரு பிரதி விலை 10,000/-  கீழே உள்ள இணைப்பில் யமுனைச் செல்வன் ராஸ லீலா பற்றி எழுதிய கட்டுரை.    
வாசிப்பு: ராஸ லீலா – கொண்டாட்டமான நாவல்