அமெரிக்க ஜனநாயகம்

நானும் ராகவனும் ராமசேஷனும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு காலைச் சிற்றுண்டிக்காக பூங்கா எதிரில் உள்ள தளிகை உணவகம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.  ஆனால் தளிகையில் உணவு நன்றாக இல்லை.  காப்பியோ படு மோசம்.  மஹா முத்ராவில் உணவு நன்றாக இருக்கும்.  ஆனால் எட்டு மணிக்குத்தான் திறப்பார்கள்.  மட்டுமல்லாமல் அங்கே ஆள் பற்றாக்குறை உண்டு.  செஃப் தாமதமாக வரும்.  சாப்பிட்டு முடித்து வெளியே வரவே ஒன்பதரை ஆகி விடும்.  அதாவது எட்டு மணிக்குப் போனால்.  அதனால் சனி ஞாயிறுகளைத் தவிர அந்தப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை.  போஜன் மெஸ்ஸை இழுத்து மூடி விட்டார்கள்.  காவேரி மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஒக்கடேவில் உணவு பிரமாதமாக இருக்கும்.  காப்பியோ முதல் தரம்.  ஆனால் அந்த உணவகம் பார்ப்பதற்கு ரயில்வே கேன்டீன் மாதிரி கசகச என்று இருக்கும்.  ஏசியெல்லாம் இல்லை.  ராமசேஷனுக்குப் பிடிக்காது.  ஆபீஸுக்கும் நேரமாகி விடும். 

அதனால் போட் கிளப்பில் நடந்து விட்டு பக்கத்தில் உள்ள சங்கீதாவில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம்.  ஒரு பதினைந்து நாள் சரியாகத்தான் போனது.  ஆனால் நேற்றோடு நிறுத்தி விட்டேன்.  காமன்மேன் தன்னுடைய முட்டாள்தனத்தால் கொல்கிறான் என்றால் எழுத்தாளர்கள் தங்கள் மூர்க்கத்தனத்தால் வதைக்கிறார்கள்.  இப்போது திரும்பவும் நாகேஸ்வர ராவ் பூங்காவிலேயே நடந்து விட்டு நேரம் இருந்தால் சங்கீதா இல்லாவிட்டால் பாடாவதி தளிகை என்று முடிவு செய்து விட்டோம்.  ராகவன் அமெரிக்கா போயிருக்கிறார்.  ரெண்டு வார ட்ரிப்.  நியூ ஜெர்ஸி.  முதல் வாரம் அங்கே உள்ள மால், மாலில் உள்ள தக்காளிப் பழம், அவருடைய அண்ணன் பையனோடு டென்னிஸ் ஆட்டம் போன்ற அரிய விஷயங்களைப் புகைப்படம் எடுத்து அனுப்பினார்.  இப்போது ஒரு பயணக் குழுவோடு இருப்பதால் வேறுவிதமான புகைப்படங்களை அனுப்புகிறார்.  அமெரிக்காவில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அங்கே உள்ள ஜனநாயம்.  நம் ஊரில் இருப்பதெல்லாம் மன்னர் ஆட்சி.  புகைப்படத்தில் ஒரு நபர் குடை போட்டு அமர்ந்து கொண்டு ட்ரம்ப்பைத் திட்டிக் கொண்டிருக்கிறாராம்.  இங்கே செய்தால் தேசத் துரோகி என்று சொல்லி பத்து வருடங்கள் உள்ளே தள்ளி விடுவார்கள்.  இங்கெல்லாம் மோடி தான் இந்தியா.  இந்தியாதான் மோடி.  எல்லாம் காங்கிரஸிடமிருந்து கற்றதுதான். 

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai