எக்ஸைல்-2 பற்றி : அராத்து

இன்று ஒரு சந்தேகம் கேட்பதற்காக அராத்துவுக்கு எக்ஸைல்-2 நாவலின் எட்டாவது அத்தியாயத்தை அனுப்பி வைத்தேன்.  மிக நீண்ட அத்தியாயம் அது.  மாலைதான் அழைப்பார் என்று பார்த்தால் கொஞ்ச நேரத்தில் அழைத்தார்.  படிச்சிட்டீங்களா என்றால் ஓ படிச்சுட்டனே என்கிறார்.  எப்படி என்று அவரே வாசகர் வட்டத்தில் எழுதியிருக்கிறார்.  பாருங்கள்:

சாருவின் எக்ஸைல் 2 ஒரு அத்தியாயம் படித்தேன்.முழுக்க முழுக்க மரங்கள் மற்றும் பூக்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.க்ளாஸிக் என கண்ணை திறந்து கொண்டே சொல்லிவிடலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் , இதைப்போல சப்ஜக்ட்டை படித்தால் டிரையாக இருக்கும்.ஆனால் இந்த அத்தியாயம் வழக்கம் போல சாருவின் ஃப்ளோவில் ஜெட் போல பறக்கிறது.

அதே எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் கால கட்டம்தான்.அதே சூர்யா இப்போது மரங்கள் , பூக்கள் , கனிகள் , காடுகள் ,பருவ நிலைகள் பற்றி பேசிக்கொண்டும் புளியம்பழத்தில் ஓட்டை போட்டு தண்ணீர் விட்டு குலுக்கி ஜூஸ் குடித்துக்கொண்டும் திரிகிறான்.முக்கியமான விஷயம் வெட்டியாக ரொமாண்டிசைஸ் செய்து கொண்டு திரியவில்லை.

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் எழுதிய காலத்தில் சாரு இருந்த மனநிலை , அவருக்கு இருந்த வாழ்க்கை பிரச்சனை , சூழல் அப்போது அப்படி கலகமாக எழுத வைத்திருக்கலாம் . அது அவருக்கு ஒரு வாசகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது.எதிர்மறையான ஒரு இமேஜ் உருவாகி இன்று வரை தொடர்கிறது.

யாரையும் , எந்த எழுத்தையும் நெகடிவாக விமர்சிக்காத சுஜாதாவே , மலம் மிதந்து கொண்டு செல்வதைப்போல என எழுத நேர்ந்தது.

இப்போது இந்த எக்சைல் 2 வில் எழுதியிருப்பது போல அப்போதே எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ல் எழுதி இருந்தால் , ஆஹா ஒரு புனிதமான க்ளாஸிக் ரைட்டர் கிடைத்து விட்டான் என அப்போதைய இலக்கிய குருமார்கள் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள். இந்நேரம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவார்டும் வாங்கியிருப்பார்.

Comments are closed.