ஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)

திட்டம் போட்டு என்னை ஏமாற்ற நினைத்த ஒரு கூட்டத்தின் தலைவன் தானே ஒரு பஞ்சாயத்தை அரசால் அமைக்க பெற்ற ஒரு குழுவின் முன் கூட்டி, அமாம் நான் இவரை ஏமாற்ற நினைத்தது உண்மை தான் என சொன்னதோடு அல்லாமல் எழுதியும் கொடுக்கிறான். இருவரோடு ஆரம்பித்த குழு மதியத்திற்குள் மூவரானது பல கோட்டைகளை தன் வாழ்நாளில் கட்டி சில சக்திகளை தன் வசப்படுத்தியவராக காட்சி அளித்தார் ஒருவர் .தீர்க்கமான குரலோடு குற்றத்தை நிமிடத்தில் கடிந்தார் ஒருவர். ஏனோ தெரியவில்லை தன் உதட்டை சுழித்து கொண்டு ஏதோ சொல்ல வருவது போல் ஒன்றுமே சொல்லாமல் இருந்தார் ஒருவர் .குழு ஏகமனதாக , ஒன்று வாங்கிய பணத்தை வட்டியோடு கொடு அல்லது அதற்கு நிகரான பொருளை கொடு என நியாயமான தீர்ப்பை அளிக்கிறது. அறம் மாறாமல் தீர்ப்பு அளித்த அதே குழு, மாலையில் அவர் பணத்தை தர விருப்பப்படவில்லை நீங்களே பார்த்து ஏதாவது செய்து கொள்ளுங்கள் என சொல்கிறது, அரசால் அமைக்கப்பெற்ற இந்த குழுவிடம் அய்யா இது நியாயம் இல்லையே என்றால், எங்களை போன்ற தொழில் இருப்பவர் அவர், அவருக்கு தானே நாங்கள் கை கொடுக்க முடியும் என்கிறது குழு . நீங்கள் கூப்பிட்டு உங்கள் பதவிக்கு மதிப்பு கொடுத்து வந்தேனே இது அநீதி இல்லையா என்றால், அவன் தருகிறேன் என இன்று சொல்லிவிட்டு நாளை தராவிட்டால் சங்கத்தால் பொறுப்பேற்க முடியாது என்கிறார்கள் அரசால் நியமிக்கப்பெற்ற பதவியாளர்கள் .பொறுப்பேற்க முடியாத நிலையில் இருக்கும் நீங்கள் எதற்கு பஞ்சாயத்தை கூட்டினீர்கள் , ஏன் என்னை அழைத்து என் பக்கம் தான் நியாயம் என ஒருமனதாக தீர்ப்பளித்து, இப்படி கைவிட்டீர்கள் என கேட்டதற்கு சங்கம் சங்கு ஊதியது .திட்டம் போட்டு திருடும் கூட்டம் மட்டுமே வாழும் காலமோ இது? விரைவில் இறைவன் பதில் சொல்வான் என நம்புகிறேன் .

ராம்ஜி நரசிம்மன்

***

மேலே உள்ள விஷயத்தை இன்று காலை ஷீர்டி பாபாவின் திருவடிகளில் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் ராம்ஜி. என்னைக் காத்த பாபா என்னைச் சுற்றியுள்ள நல்லவர்களையும் காப்பாற்றுவார். அதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை.

சாரு