Locked Up

லக்ஷ்மி சரவணகுமாரின் பரிந்துரையின் பேரில் Locked Up என்ற வெப்சீரீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் சீஸனின் சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் நாலைந்து எபிசோடுகளுக்குப் பிறகு நேராக நாலாவது சீஸனுக்கு வந்து விட்டேன். எடிட்டிங்கில் பின்னியெடுத்திருக்கிறார்கள். இந்த அளவு சிறப்பான எடிட்டிங்கை நான் சினிமாவிலோ வேறு சீரீஸிலோ பார்த்ததில்லை. இதுதான் உச்சபட்சம். இம்மாதிரி எடிட்டிங்கை நான் ஸீரோ டிகிரியில் பயன்படுத்தியிருக்கிறேன். மரியோ பர்கஸ் யோசா அவரது Conversation in the Cathedral நாவலில் பயன்படுத்தியிருக்கிறார். இம்மாதிரி எடிட்டிங் மூலம் ஒரு படத்தின் மொத்த வடிவத்தையே மாற்றி விட முடியும். புத்தக வாசிப்பு என்பது எப்படியோ அதே தரத்துக்கு வெப் சீரீஸையும் உயர்த்த முடியும் என்பதற்கு ஒரு சான்று Locked Up. பல இடங்கள் குரஸவா படத்தைப் பார்ப்பது போன்ற அதி உன்னத காவிய ரசங்களைத் தரக் கூடியதாக உள்ளது. அல்ஷீமர் வியாதியால் பாதிக்கப்பட்ட மாமி என்ற பெண் பேசும் வசனம் அப்படியே ஷேக்ஸ்பியரிலிருந்து தூக்கியது போல் இருந்தது. class. லக்ஷ்மிக்கு நன்றி. இதுபோல் நீ பார்த்த மற்றவற்றையும் எனக்கு சொல். பொதுவாக நண்பர்களின் பரிந்துரையின் பேரில் போய்ப் பார்த்தால் அவை பெரும்பாலும் என் ரசனைக்கு ஒத்ததாக இல்லை. உதாரணமாக, எல்லோராலும் பாராட்டப்படும் Orange is the,,, சீரீஸை என்னால் பார்க்க முடியவில்லை. அதேபோல் ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்.