நடந்தது என்ன? : அராத்து (7)

பின்வருவது அராத்து அவரது முகநூலில் எழுதியது:

சுற்றம் – நடந்தது என்ன ? சாரு – மனுஷ் – வி.மு மற்றும் கடைசியாக அராத்து.

விநாயக முருகன் நாவலைப்பற்றி பேச விநாயக முருகனும் மனுஷ்யபுத்திரனும் சாருவை அழைக்கிறார்கள்.

கொடைக்கானலில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு இடையில் சாரு நாவலைப் படிக்கிறார்.கொடைக்கானலில் இருந்து சென்னை வருகையில் காரில் அமர்ந்து நாவலைப் படித்துக் கொண்டே வருகிறார்.

இடையில் ஒரு கடையில் டீ குடிக்க நிறுத்திவிட்டு நாங்கள் எல்லாம் அரட்டை அடித்துக் கொண்டு டீ குடித்துக் கொண்டு இருக்கையில் , காரிலேயே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். சாம் நாதன் அதைக் காட்டி , என்னா மச்சி அரக்கன் போல படிக்கிறாரு என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.

படித்து முடித்து விட்டு , மனுஷ்ய புத்திரனை போனில் அழைத்து, இந்தப் புத்தகத்தைப் பற்றி பேச நான் விழாவுக்கு வரலை; பாத்துக்கோங்க என நாகரீகமாக கூறுகிறார். மேட்டர் ஓவர்.

இதில் என்ன பிரச்சனை? இதை அப்படியே விட்டு விட்டு வேறு யாரையாவது பேச வைத்து விழாவை முடித்திருந்தால் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் முடிந்து போயிருக்கும். தனிப்பட்ட முறையில் போனில் பேசியதை நைஸ் நைஸாக வெளியே இழுத்து , சாருவையும் தூண்டிவிட்டு, பக்கம் பக்கமாக விளக்கவுரை எழுதிக் கொண்டிருந்தால்? அதுதான் நோக்கமென்றால் ஒரு பிரச்சனையும் இல்லை.

சினிமாக்காரர்கள் கூடத்தான் தனிப்பட்ட முறையில் பலதை போனில் எழுத்தாளர்களிடம் பேசுகிறார்கள். அரசியல்வாதிகள் பேசுகிறார்கள். அதையெல்லாம் வெளியே போஸ்ட் போட்டு வம்புக்கு இழுத்து விவாதித்துக் கொண்டா இருக்கிறீர்கள்?

சாம்நாதனின் களவு காமம் காதல் கூட்டத்திற்கு நூறு சதவீதம் வருகிறேன் என உறுதியளித்துவிட்டு கடைசி நேரத்தில் பதிப்பாளரே வரவில்லை. ஆத்மார்த்தி, ஐயப்ப மாதவன் வரவில்லை.அதை விட காமடி, வரமுடியாது என ஒரு மேசேஜ் கூட கிடையாது. அதற்குப் பிறகும் அதைப் பற்றி பேச்சில்லை. இதைப் போன்ற  நாகரீகமான இலக்கிய உலக கலாச்சாரத்தில் , முன் கூட்டியே ஒருவன் போன் செய்து வர இயலாது என்பதை நாகரீகமாக சொல்பவன் லூஸு.

சாரு நிவேதிதாவிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட அந்தப்  புத்தகக் கூட்டத்தில், சாரு நாவலைப் பற்றி விமர்சித்து பேசினார். அதுவும் எப்படி? ”பத்து பக்கம் கஜ கஜன்னு போச்சி , அதுக்கு மேல என்னால படிக்க முடியலை.”

சாம்நாதனின் கூட்டத்தில் அங்கே  அமர்ந்து உரையை கேட்டுக் கொண்டிருந்த விநாயக முருகனை பாராட்டிப் பேசினார். என்னைப் பாராட்டிப்  பேசினார்.  சாம் இதையெல்லாம் ஒரு வார்த்தை கூட ஃபேஸ்புக்கில் மூச்சு விடாமல் அன்று இரவு சாருவுடன் கூத்தடித்து விட்டு , கேர்ள் ஃபிரண்டைப் பார்க்க லங்காவிக்கு பூட்டான்.

சரவண கார்த்திகேயன் கூட்டத்திலும்  சாரு அந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சித்துப் பேசினார். இது என்ன புதுசா? தெரிஞ்சே போய் புத்தகத்தைக் கொடுத்துட்டு லபோ திபோன்னா? எனக்குத் தெரிந்து விழா மேடையில் சாரு , மனுஷ்யபுத்திரனைத் தவிர வேறு யாரையும் பாராட்டிப் பேசியதில்லை .

இதற்கே விநாயக முருகனுக்கு சாரு கொடுத்த முதல் பதில் மிகவும்  மென்மையாக, நட்புரீதியாக இருந்தது. காஃபி ஷாப்பில் அமர்ந்து உங்களோடு இந்த நாவல் பற்றிப் பேசுகிறேன் என்றார்.  இலக்கணப் பிழை இருக்கிறது என்றால் , வி.மு ஒற்றெழுத்துப் பிழை எல்லாம் பிழையா என்கிறார். ஒற்றெழுத்துப் பிழை என் ஏரியா வி.மு, அதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட வேண்டாம்.

ஒரு சாதியை மட்டும் நாவலின் கதாபாத்திரங்கள் திட்டுகின்றன. வேறு வலுவாக இருக்கும் ஜாதியைத் திட்ட முடியுமா என்று கேட்டால் , ஜாதி இல்லாமல் நாவல் எழுத முடியாது என்பதா பதில்.

தலித்துகளை பழைய எழுத்தாளர்கள் திட்டி எழுதியுள்ளார்கள் என்பது மனுஷின் வாதம். ரவிக்குமாரே அப்படியெல்லாம் இல்லை என சொல்லியும் சுந்தர ராமிசாமியை சும்மாவா விட்டார்கள்?

தற்கொலைக் குறுங்கதைகளை எழுதிக் கொண்டு போய் நான் எந்தப் பிரபல எழுத்தாளரிடமும் தரவில்லை. வந்து பேசுங்கள் என்றும் சொல்லவில்லை. ஜெயமோகனை  அழைக்கலாமே என மனுஷே என்னிடம் சொன்னபோது கூட, ஒண்ணுமில்லாத இதுல அவரு ஏதாவது கண்டுபிடிச்சிடப் போறாருங்க, ஏங்க வம்பு என கூறினேன்.  நான் எஸ்.ரா விடமோ,  ஜெமோவிடமோ என் தற்கொலைக் குறுங்கதைகளைக்  கொடுத்து, படி , படி; என் கூட்டத்துக்கு வந்து புகழ்ந்து பேசு என நெருக்கடி கொடுத்து இருந்தால், நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அந்த நாவலை அவர்கள் கேவலமாகத் திட்டிப்  பேசியிருப்பார்கள்.

ஒரு நாவலை எழுதிக் கொண்டு போய் ஒரு பிரபல இலக்கிய எழுத்தாளரிடம் கொடுத்தால் , அவர் மூடிக்கொண்டு வந்து அந்த நாவலைப் பற்றி நன்றாகத்தான் பேச வேண்டும் என நினைப்பது என்ன விதமான எதிர்பார்ப்பு? விமர்சனத்தை வரவேற்கிறேன் என சொல்லிவிட்டு, விமர்சனத்தையும் வாயில் கையை விட்டுப் பிடுங்கிவிட்டு ஏன் கொந்தளிக்க வேண்டும் ?

என்னுடைய விழாவிற்கு வருகிறேன் என உறுதியாக சிலர் சொன்னார்கள்.  இப்போது அதை உறுதி செய்து பத்திரிகை அடிக்கலாம் என அழைத்தால் போனை இரண்டு நாட்களாக எடுக்க மாட்டேன் என்கிறார்கள். அது அவர்கள் உரிமை என நான் மூடிக் கொண்டு விழா முடிந்ததும் எங்கடா பார்ட்டி வைக்கலாம் என இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.

மோசமா இருக்கு , நான் வரமாட்டேன்.

என் இமேஜுக்கு செட்டாகாது.

இப்படியும் சொல்லி சிலர் என் விழாவுக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்தும் இருக்கிறார்கள்.

கடைசியாக :-

சாருவின் புகழுரையை உண்மை என நம்பி அராத்து நின்று விடக் கூடாது.   மேலும் மேலும் சிறப்பாக எழுத வேண்டும் என மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ளார்.

மேலும் மேலும் சிறப்பாக எழுதி?          

Comments are closed.