பூச்சிக்கு இடையே ஓர் இடைச்செருகல்:

முகநூலில் பின்வருமாறு ஒரு உரையாடல்:

கலை என்பதை அது தொடர்பான நிபுணர்கள் அதாவது கலைஞர்கள் தான் உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒவ்வொருவருடைய வாழ்வும் கலை இல்லையா?ஒரு வீடோ அல்லது ஒரு விளக்கோ கலைப் பொருளாகக் கருதப்படும்போது நமது வாழ்க்கை ஏன் கலை என அங்கீகரிக்கப்படவில்லை?”


– மிஷேல் ஃபூக்கோ
தமிழில்: ரவிக்குமார்.
தன்னிலையும் அதிகாரமும்: (

அராத்து: கலைக்கு கற்பனை தேவை. படைப்பூக்கம் இருக்கும்.

நம் அன்றாட வாழ்வில் என்ன பெரிய கற்பனையும் படைப்பூக்கம் இருக்கிறது.

தினமும் ஒரே மாதிரி சாப்பிட்டு ஒரே மாதிரி ஆய் போய் ஒரே மாதிரி மேட்டர் செய்வது எப்படி கலையாகும்?

செல்வகுமார்:  நடக்கும் முன் கொரோனாவை எல்லாம் யாராவது கற்பனை பண்ண முடியுமா? நாம் அதனுடன் வாழவில்லையா? இத்தனை த்ரில்லை வேறு எங்காவது அனுபவிக்க முடியுமா? தாங்கள் கடைசியாக இன்னொருவரை முத்தமிட்டு எத்தனை நாட்களாகிவிட்ட்து என்ற ஆச்சரியம் எழவில்லையா? 🙂

அராத்து: நாய் கூட தான் மேட்டர் செய்து விட்டு கொஞ்ச நேரம் மாட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும். இதையெல்லாமா கலை என்று சொல்லமுடியும் 🙂

சிசிஃபஸ்: நீட்ஷே கிட்டத்தட்ட இப்படி கூறுகிறார்:
“In art man enjoys himself as perfection. Art is then the supreme delight of existence.Art is the fountain and source of joy in the world par excellence.Art is what makes life endurable and thus possible. Art is what make life worth living.”

அராத்து: மனித வாழ்விலிருந்து கலை எடுக்கப்பட்டாலும் அந்தந்த காலகட்டத்தில் அது மனித வாழ்வை மீறியதாக இருக்கிறது. அந்த மீறல் மனிதன் இன்னும் வாழ்வதற்கான தேவையை உண்டாக்குகிறது. சில சமயங்களில் மனித வாழ்விற்கும் கலைக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

மனிதவாழ்வு தொடக்கத்திலிருந்து ஒரு மாதிரி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்த மனித வாழ்வில் இருந்து உருவான ஆதி கலை தனக்கான தனி பாதையை உருவாக்கிக் கொண்டு அது தனியாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்வும் கலையும் எங்கேயும் எப்போதேனும் சந்தித்துக் கொள்ளலாம். அது ஒரு ஸ்வீட் மொமன்ட் அவ்வளவுதான்.

மற்றபடி மனித வாழ்வு எப்போதும் கலை ஆகாது.

செல்வா மற்றும் நண்பர்களுக்கு, என்னுடைய மெதூஸாவின் மதுக்கோப்பையில் ஃபூக்கோவை ஹெலன் சிஸு காலி பண்ணிக் கழுவி ஊற்றும் பல கட்டங்களை எழுதியிருக்கிறேன். மேலே உள்ள ஃபூக்கோவின் மேற்கோள், அதை அந்த மேற்கோளாக மட்டும் பார்த்தால் சுத்தப் பேத்தல். ஃபூக்கோவுக்கும் உளறுவதற்கு உரிமை இல்லையா என்ன? சார்த்தர் காலாவதியானது போல் ஃபூக்கோவும் காலாவதி ஆகி ரொம்ப காலம் ஆகிறது. இம்மாதிரி மேற்கோள்களுக்கும் கூட காலம் முடிந்து விட்டது போல் தோன்றுகிறது. சொல்லப் போனால் ஃபூக்கோ இந்த நூலிலேயே இதே மேற்கோளை பின்னால் மறுதலிக்கவும் வாய்ப்பு உண்டு. நான் உங்கள் யாருக்குமே ஃபூக்கோவை வாசிக்க சிபாரிசு செய்ய மாட்டேன். ஏனென்றால், Quantum mechanics இல் உள்ள நான்கு அம்சங்களான quantization of physical properties, quatum entanglement, principle of uncertainty and wave- particle என்பனவற்றில் Principle of Uncertaintyயை மட்டும் எடுத்துக் கொண்டு momentum and positionஐ விளக்கினால் எப்படியோ அப்படித்தான். 

உங்களுக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் படிக்க ஆர்வம் இருந்தால் மட்டுமே அதைப் படிக்கலாம்.  இல்லாமல் திடீரென்று போய் Principle of Uncertainty என்று உட்கார்ந்தால் என்ன பயன்?  ஃபூக்கோவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஃபூக்கோ ரீடர் படியுங்கள்.  படித்தால் ஃபூக்கோவின் சாரத்தைப் புரிந்து கொள்ளலாம்.  ஆனால் ஃபூக்கோவை மறுத்து அதற்கு மேல் சென்று விட்டார்களே?    

ஃபூக்கோவுக்கு மூன்றாம் உலக நாடுகள் பற்றியோ அதன் பிரச்சினைகள் பற்றியோ எதுவுமே தெரியாது.  ஃபூக்கோவின் முக்கியத்துவம் என்னவென்றால், அதுவரையிலும் எந்தத் தத்துவவாதியும் தொடாத பகுதிகளைத் தொட்டு விளக்கினார்; ஆய்வு செய்தார்.  முக்கியமாக, சிறைச்சாலைகள், மனநோய் மருத்துவமனைகள், பாலியலின் வரலாறு, தண்டனை முறைகள்.  இதெல்லாம் தத்துவத்தில் அதுகாறும் விலக்கி வைக்கப்பட்டவையாக இருந்தன. 

சுருக்கமாகச் சொன்னால், ஃபூக்கோவைப் பயில்வதை விடவும் ஜார்ஜ் பத்தாயைப் (Georges Bataille) படிப்பது நமது கருத்துலகப் பயணத்துக்கு உதவியாக இருக்கும்.  அதை விட உத்தமம், புனைகதைகள் படிப்பது.  அதுவே இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு உள்ளன.  ஃபூக்கோ, ஜார்ஜ் பத்தாய் போன்றவர்களையெல்லாம் நாம் புத்திஜீவிகளிடம் கொடுத்து விடுவோம்.  பாவம், எல்லோருடைய ஏரியாவையும் நாமே அப்பிக் கொள்ளலாமா செல்வா?