8. To You Through Me – நகுலன்

என்னுடைய வாசிப்பு வேகம் கொஞ்சம் கம்மிதான்.  கொஞ்சம் அல்ல. ரொம்பவே கம்மி என்றுதான் சொல்ல வேண்டும்.  தமிழாவது பரவாயில்லை.  ஆங்கிலம் ரொம்ப மோசம்.  நம்ப முடியாத அளவுக்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலமாகவே நான் படித்து முடித்த ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து முடித்தேன்.  இல்லாவிட்டால் இதில் பத்தில் ஒரு பங்கைக் கூட முடித்திருக்க முடியாது.  நேற்று மாலை எட்டு மணிக்குத் தொடங்கி இரவு உறங்குவதற்குள் Elif Shafak-இன் The Forty Rules of Love: A Novel of Rumi-இன் 80 பக்கங்களை முடித்து விட்டதாக காயத்ரி சொன்னாள்.  அவ்வளவெல்லாம் நம்மால் ஆகாது.  நகுலனின் நினைவுப் பாதையை முடிக்க மூன்று நாள் ஆனது.  மூன்று முழு நாள்.  எடுபிடி வேலைக்கே போகவில்லை.  நேற்று முடித்து விட்டு நவீனன் டைரியை எடுத்தேன்.  நேற்று இரவுக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தேன்.  அதுவோ நினைவுப் பாதையை விட நேரம் எடுத்தது.  ஒரு மணி நேரம் படித்து விட்டு எவ்வளவு நகர்ந்திருக்கிறது என்று பார்த்தால் மூன்று பக்கம்!  மொத்தம் பனிரண்டு மணி நேரம் படித்து 40 பக்கம் முடித்திருக்கிறேன்.  தமிழில் எழுதிய வேறு எந்த எழுத்தாளருக்கும் இத்தனை நேரம் எடுத்ததில்லை.  கடினம் என்று அல்ல.  நகுலன் உருவாக்கியிருக்கும் புனைவு வெளி அப்படிப்பட்டதாக இருக்கிறது.  தியானம் செய்து பழகியவர்களுக்குத் தெரியும்.  இருபது நிமிடம் என்று தோன்றும்.  தியானத்திலிருந்து வெளியே வரும்போது இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும்.  அது போல.  தியானத்தை ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்.  பயந்து விடாதீர்கள். 

என்னுடைய உரைகளிலேயே ஆகச் சிறந்ததாக நினைப்பது கு.ப.ரா. பற்றிய ஒன்றரை மணி நேர உரை.  அதற்கு அடுத்து சென்ற மாதம் நிகழ்த்திய செல்லப்பா.  நகுலன் பற்றிய உரை இந்த இரண்டையும் விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  ’எல்லோரையும் வரவழைப்பதற்கான உத்தி’ என தயவுசெய்து நினைத்து விட வேண்டாம்.  எப்படியும் நூறு பேர் வந்து விடுகிறார்கள்.  அதற்கும் மேல் நூறு பேர் வரை வந்து இடமில்லாமல் சென்று விடுகிறார்கள்.  எனவே இப்படியெல்லாம் எழுதி யாரையும் வரவழைக்க வேண்டும் என்ற நிலை இலக்கியம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம்.  என்றாலும், இதை எழுதக் காரணம், நகுலன் பற்றிய என் உரையைத் தவற விட்டு விடாதீர்கள்.  நகுலன் என் ஆசான்.  நான் நகுலன் பள்ளியைச் சேர்ந்தவன்.  நகுலனின் முழு உலகையும் இப்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்.  இந்த வாசிப்பின் அவதானங்களை 28-ஆம் தேதி இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.  என் வாழ்க்கை முழுவதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்து வருபவன் நான்.  எனவே ஆறு மணிக்கு வந்து விடுவேன்.  சென்ற முறை ஓரிரு நிமிடங்கள் தாமதமானதற்குக் காரணம், இந்த ஸூம் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் பரிச்சயமாகவில்லை. 

சந்திப்பில் கலந்து கொள்ள விபரங்கள்:

Topic: Session with Charu – நகுலன்
Time: Jun 28, 2020

06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://zoom.us/j/9205225069?pwd=SHhzUTVwNlNyc3crbjl5TGsvc1VYdz09

Meeting ID: 920 522 5069
Password: 7Xed4N

அதே நடைமுறைகள் தான்:

  1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் 100 நபர்கள் சந்திப்பில் பங்குபெறலாம். மற்றவர்களால் இயலாது.
  2. சந்திப்பு சரியாக காலை 6 மணிக்குத் தொடங்கியவுடன், சதீஷ்வரனும் நானும் மாத்திரம் unmute-ல் இருப்போம். இணையும் மற்றவர்கள் அனைவரும் mute-ல் இருப்பர். இது தேவையற்ற இடையூறுகள், இரைச்சல்களைத் தவிர்க்க.
  3. முதல் இரண்டு மணி நேரம் என் உரை முடிந்தவுடன், கேள்வி கேட்க விரும்புபவர்கள் Zoom chat box-ல் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவர்கள் வரிசையாக, ஒவ்வொருவராக unmute செய்யப்படுவார்கள்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

Post navigation