பூச்சி 97

நேர விஷயத்தில் எப்போதுமே நான் ராணுவ ஒழுங்குதான்.  பல நண்பர்கள் இத்தனைக்கும் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்பார்கள்.  நான் செய்யும் சில தியாகங்கள்தான் காரணம்.  முதல் விஷயம்.  மனித உறவுகளை, நட்புகளைப் பேணுவதில்லை.  டாக்டர் குமரவேல் மூன்று தினங்களுக்கு முன் போனில் அழைத்தார்.  நாளை அழைக்கிறேன் என்று மெஸேஜ் பண்ணினேன்.  இன்னமும் அழைக்கவில்லை.  ராமசேஷன் பல தினங்களுக்கு முன்பு போன் செய்தார்.  இன்னும் நான் அழைக்கவில்லை.  ராம்ஜியின் குரலே மறந்து விட்டது.  சீனியுடன் பேசி பத்து நாள் ஆகிறது.  ஸ்ரீராமிடம் பேசி நால்வர் குழுவில் உங்கள் பெயர் இல்லாதது குறித்து வருத்தமா என்று மட்டும் கேட்டேன்.  சேச்சே, இப்படிக் கேட்பதுதான் வருத்தம் என்றார்.  வாழ்க வளர்க சொல்லி போனை வைத்து விட்டேன்.  இப்படியாக போன் பேசாமல் நேரத்தை மிச்சப்படுத்துவேன்.  ஆனாலும் நெருங்கிய பழக்கம் இல்லாதவர்கள் அல்லது என்னை அறியாதவர்கள் விலகி விடுவார்கள்.  தொலைக்காட்சி பார்ப்பதில்லை.  செய்தித்தாள் படிப்பதில்லை.  அப்புறம் எப்படி செய்திகள் தெரியும் என்றால், இரண்டு நண்பர்கள் எனக்காக செய்தித்தாள் படித்து முக்கிய செய்திகளைச் சுருக்கி அனுப்பி விடுவார்கள்.  யார் வீட்டு விசேஷத்துக்கும் போவதில்லை.  சுருக்கமாகச் சொன்னால் மனித உறவு எதையுமே பேணுவதில்லை.  பிறந்த நாள் வாழ்த்து கூடச் சொல்வதில்லை.  சமீபத்தில் அராத்துவின் பிறந்த நாள் வந்து ஃபேஸ்புக்கெல்லாம் ஒரே அதகளப்பட்டது.  நான் போன் செய்து வாழ்த்தவில்லை.  வாழ்த்தியிருந்தால் ரொம்பவே அதிர்ச்சியாகி இருப்பார்.  இந்த முதிர்ச்சியை நான் பெண்களிடம் அதிகம் பார்க்க முடிவதில்லை.  ஒருவேளை எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பெண்கள் அப்படி இருக்கிறார்களோ என்னவோம்.  எடுபிடி வேலையும் இந்தக் கொரோனாவினால்தான்.  அதுவும் இப்போது முற்றுப்புள்ளி.  ஆக, இப்படியாகத்தான் எக்கச்சக்கமாக நேரம் கிடைக்கிறது. 

இப்போது என் நேரத்தை இன்னமும் ஒழுங்குபடுத்தலாம் என்று முடிவெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே வெப்சீரீஸ் பார்ப்பதில்லை.  நான் முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பிறழ மாட்டேன்.  உதாரணமாக, மதுவை எடுத்துக் கொள்ளலாம்.  ரெமி மார்ட்டினைத் தொட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.  வைனைத் தொட்டு ஆறு மாதம் இருக்கும்.  இன்னமும் ஆறு மாதம் ஆகலாம்.  ஒரு வருடம் ஆகலாம்.  அது ஒரு பொருட்டே அல்ல.  இருந்தால் அட்டகாசம்.  இல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை.  ஆனால் மீன் உணவுக்கும் காஃபிக்கும் நான் அடிக்ட்.  மீன் சாப்பிட்டு மூன்று வாரம் ஆகிறது.  அப்படியே பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறது.  வாரம் ஒருமுறை மீன் சாப்பிடாமல் என்னால் வாழவே முடியாது.  எனவே மதுவை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்த பிறகு அதில் மாற்றம் கொடுப்பதில்லை.  அப்படித்தான் வெப்சீரீஸும்.  எல்லா முக்கியமான சீரீஸும் பார்த்து விட்டேன்.  போதும்.

இப்போது பூச்சி தவிர, மாதாந்திரச் சந்திப்பு தவிர இரண்டு அதிமுக்கிய வேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.  இரண்டுமே ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் எட்டு மணி நேரத்தைக் கோரும் வேலை.  அதனால் ஒருநாள் முதல் வேலை, இரண்டாம் நாள் இரண்டாவது வேலை என்று பிரித்துப் பிரித்து செய்து கொண்டிருக்கிறேன்.  முடித்ததும் உங்களுக்கே தெரிய வரும்.

”தங்களது மூன்றேகால் மணி நேர உரை முழுவதும் பங்கேற்க முடிந்தது. கல்லூரியில் தத்துவயியல் படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் பேராசிரியராக இருந்தால் அவர்கள் மிக எளிமையாக கற்றுக்கொள்வார்கள் என்று எண்ணினேன்.
மீண்டும் நகுலன் உரையை கேட்க லிங்க் அனுப்பியதற்கு நன்றி” என்று அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் பிரின்ஸ் ராஜா இன்று எழுதியிருந்தார்.  இது பற்றி நான் அதிகம் யோசித்ததுண்டு.  2000-2001இல் நான் பாரிஸ் சென்றிருந்த போது ஸோர்போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு தத்துவப் பேராசிரியரோடு ஒரு இரவு பூராவும் பேசிக் கொண்டிருந்தபோது அவரும் இதையேதான் சொன்னார்.  ஆனால் நான் தத்துவம் பற்றி அதிகம் எழுதியதில்லை.  ஆரம்ப காலத்தில் எழுதினேன்.  பிறகு புனைவெழுத்தில் ஈடுபடுவோம் என்று தோன்றிவிட்டது.  தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் ஈடுபடும் அளவுக்கு இங்கே தமிழ்நாட்டில் தோதான சூழல் நிலவவில்லை.  பல்கலைக்கழகச் சூழலைச் சொல்கிறேன்.  தமிழ்நாட்டில் சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்கார் (1871 –  1946) என்ற வரலாற்றாசிரியர் இருந்தார்.  கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சாக்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தவர்.  அவர் நடத்திய Journal of Indian History பத்திரிகை சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றிருந்தது.  அவருடைய முக்கியமான நூல்களை நான் ஆரம்ப காலத்தில் படித்திருக்கிறேன்.  அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம், வரலாற்றில் மதத்தைக் கலக்க மாட்டார்.  ராமாயணம், மகாபாரதம், ஆரியர் வருகை போன்ற விஷயங்களில் அவருடைய எழுத்து ஒரு மேற்கத்திய வரலாற்று ஆய்வாளரிடம் காணக்கூடிய விஞ்ஞான அணுகுமுறையுடனேயே இருந்தது.  எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.   கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ஆசிரியர் என்று ஞாபகம்.  இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், இங்கே தமிழ்நாட்டில் தத்துவத் துறைக்கெல்லாம் மதிப்பு கிடையாது. 

தத்துவத்தில் எனக்கு ஆரம்ப காலத்தில் ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தவர் ரணஜித் குஹா.  அவருக்கு இப்போது வயது 98.  இப்போது பிரபலமாக இருக்கும் ராமச்சந்திர குஹாவுக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை.  ரணஜித் குஹா தொகுத்த Subaltern Studies ஒன்பது தொகுதிகளையும் அப்போது பள்ளி மாணவனைப் போல் கற்றிருக்கிறேன்.  இந்திய வரலாற்றின் subaltern பக்கங்கள் அவை.  ஆனால் இந்தியத் தத்துவத் துறையின் அவலம் என்னவென்றால், அவர்கள் முழுக்க முழுக்க கம்யூனிஸத்தினால் ஆக்ரமிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  ஒரு பக்கம் இந்துத்துவவாதிகள்.  இன்னொரு பக்கம் இந்த மாதிரி கம்யூனிஸ்ட், இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்கள்.  நடுநிலையான ஆய்வாளர்களையே இந்தியாவில் காண முடியவில்லை. 

ஆனால் மேற்கத்திய தத்துவத் துறையில் இப்படி இல்லை.  அங்கே தத்துவப் பேராசிரியர் என்றால், ஏற்கனவே எழுதியிருக்கிறேன் – அந்த நாட்டின் அதிபரையும் விடப் பெரிய ஆள்.  இலக்கியவாதியையும் விட தத்துவவாதிகளைப் பெரிய ஆட்களாகக் கருதும் மரபு அது.  அதனால்தான் இன்றளவும் மேற்கில் நீட்ஷேவைக் கொண்டாடுகிறார்கள்.  ஃப்ரெஞ்ச் இலக்கியவாதிகளையும் விட மிஷல் ஃபூக்கோவுக்குத்தான் இன்றளவும் பெயர்.  தத்துவத் துறையில் இன்று ஸ்லோவாய் ஸிஸெக் (Slavoj Žižek) ஒரு பாப் ஸ்டார் அளவுக்குப் பிரபலம் ஆனவர்.  இத்தனைக்கும் அவர் ஸ்லோவேனியா என்ற குட்டி நாட்டைச் சேர்ந்தவர். 

தத்துவம் ஏதோ ஒரு மெட்டாஃபிஸிகல் விஷயம், புத்திஜீவிகளுக்கானது என்று பலரும் நினைக்கிறார்கள்.  தத்துவம் இல்லாவிட்டால் மனித வாழ்க்கையே இல்லை.  மனித வாழ்வின் அடிப்படையாக விளங்குவது கடவுள்.  மனிதர்களின் உயிரை விட மனிதர்கள் பெரிதாக மதிக்கும் விஷயம்.  கடவுளின் பெயரால்தான் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் இறந்திருக்கிறார்கள்.  கடவுளின் பெயரால்தான் ஆயிரம் ஆண்டுகள் போர் நடந்தது.  அப்படிப்பட்ட கடவுள் என்பதே தத்துவம் சார்ந்ததுதானே?  கடவுள் என்ற கருதுகோள் விஞ்ஞானம் சார்ந்தது அல்ல, இலக்கியம் சார்ந்தது அல்ல, வேறு எந்த அறிவுத் துறையையும் சார்ந்தது அல்ல.  முழுக்க முழுக்க தத்துவம் சார்ந்தது கடவுள்.  சங்கரர் என்ற ஒரே ஒரு தத்துவவாதி எட்டாம் நூற்றாண்டில் தோன்றியிருக்காவிட்டால் – அதுவும் வெறும் 32 ஆண்டுகளே வாழ்ந்தவர் அவர் – இன்று இந்துக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அத்தனை பேரும் பௌத்தர்களாக இருந்திருப்பார்கள்.  இப்படி ஒரு தேசத்தின் சமூகவியலை, அரசியலை, தேசத்தின் தலையெழுத்தையே மாற்றவல்லது தத்துவம்.  அதேபோல் கார்ல் மார்க்ஸ் என்ற தத்துவவாதி இல்லையெனில் உலக சரித்திரமே வேறு மாதிரி இருந்திருக்கும்.  மார்க்ஸாவது தத்துவத்தை செயல்முறையாக மாற்றியவர்.  ஆனால் மார்க்ஸின் ஆசானாகிய ஹெகல் முழுக்க முழுக்கத் தத்துவவாதி.  ஹெகலை விட நான் உயரமானவன், ஏனென்றால் நான் அவரது தோளின் மீது நின்று கொண்டிருக்கிறேன் என்றார் மார்க்ஸ். 

எந்த ஒரு தேசம் தத்துவத்தை இழக்கிறதோ அந்த தேசம் ஆன்மா இழந்து போகும்.  இந்தியாவைப் போல, அமெரிக்காவைப் போல.  என் நூலகத்தில் பெரும்பாலும் தத்துவம் சார்ந்த நூல்களே இடம் பெற்றிருக்கின்றன.  என்னிடம் உள்ள நூலகத்தைப் போன்ற ஒரு நூலகம் இந்தியாவில் எந்த ஒரு தனி நபரிடமும் இருக்க வாய்ப்பு இல்லை.  நிறுவனங்களிடம் இருக்கலாம்.  தனிநபர்களிடம் இருக்க வாய்ப்பே இல்லை.  இதை விட எண்ணிக்கை பெரிதாக இருக்கலாம்.  ஆனால் இது போன்ற நூல்கள் இருக்க வாய்ப்பு இல்லை.  இதற்காகத்தான் இத்தனை வாடகை கொடுத்து இவ்வளவு பெரிய வீட்டில் குடியிருக்கிறேன். 

அவற்றில் சில:

Antonin Artaud: Blows and Bombs : The Biography by Stephen Barber

2. Antonin Artaud Selected Writings ஸூஸன் ஸொண்டாக் தொகுத்தது.

3. A Barthes Reader ஸுஸன் ஸொண்டாக் தொகுத்தது.

4. Of Grammatology by Jacques Derrida Translated by Gayathri Spivak

5. The Cambridge Companion to Postmodernism by Steven Connor

6. A Postmodern Condition: A Report on Knowledge by Jean- Francois  Lyotard

7. The Kristeva Reader

8. The Sublime Object of Idealogy (The Essential Zizek) : Slovej Zizek

9. This sex which is not one by Luce Irigaray

இது போல் சுமார் ஐநூறு புத்தகங்கள் இதே பொருளில் உள்ளன.  மேற்கத்திய நவீன தத்துவம்.  குறிப்பாக ஃப்ரெஞ்ச்.  இதை இங்கே சொல்லக் காரணம், என் எழுத்தை மிக கவனமாகப் பயிலும் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம் என்பதால்தான்.  இதையெல்லாம் பற்றி எழுத மாட்டேன்.  என் துறை புனைவெழுத்து.  வாசகர் வட்ட சந்திப்புகளில் இந்த நூல்களின் சாரத்தைக் கொடுப்பேன்.  அவ்வளவுதான். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai