பூச்சி 98

I was astounded by the range of books you have read on what can I call it philosophy.  How without a guru?

You may have your own reasons for not writing simplifying  these treatises. One existing poor readership or the dryness of subject for the majority. People with less than half your knowledge, roam  as GURUS some existing thriving on mere Namas, of divine.

Second  your stint at New Delhi…

மேலே உள்ள கடிதம் என் மதிப்புக்குரிய மூத்த வாசகர் பாலசுப்ரமணியன்.  குரு பற்றி எழுதியிருக்கிறார்.  எனக்கும் ஆசான்கள் உண்டு.  நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமுமே என்னைப் பொறுத்தவரை ஒரு ஆசானின் குரல் என்றுதான் தோன்றும்.  ஒரு மிக மோசமான மனிதன் கூட எனக்கு ஆசானாக விளங்குவதைப் பார்த்திருக்கிறேன்.  நான் எப்படி இருக்கக் கூடாது என்பதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.  ஆனால் தத்துவம் என்பது இத்தனை எளிதானதோ தட்டையானதோ ஒற்றைப் பரிமாணம் கொண்டதோ அல்ல.  ஃபூக்கோவின் புத்தகமெல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை.  தெரிதாவின் Of Grammatology யையும் Writing and Difference ஐயும் வைத்துக் கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்.  எண்பதுகள்.  என் கூட இருந்தவர்களெல்லாம் ஐஐடியில் தத்துவம் படித்தவர்கள்.  ரமேஷ் என்ற நாகார்ச்சுனன்.  மேட்டுக்குடி பிராமணர்.  மைலாப்பூர்.  அப்பா மைலாப்பூரிலேயே புகழ்பெற்ற டாக்டர்.  அம்மா சங்கீதக் கல்லூரியின் பிரின்ஸிபால்.  கேட்க வேண்டுமா?  நானோ குப்பைக்காட்டிலிருந்து வந்தவன்.  அப்பா ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார்.  நான் பியுசியையே மூன்று வருடம் படித்தவன்.  பிஎஸ்ஸியில் ஒரு பரீட்சை கூட எழுதாத ட்ராப் அவ்ட்.  ஆங்கிலமும் சரியாகத் தெரியாது.  இப்போதுபோல் கூகிள் கீகிள் எதுவும் கிடையாது.  எல்லாவற்றுக்கும் என்ஸைக்ளோபீடியாவைத்தான் தேடி கன்னிமாரா நூலகத்துக்கு ஓட வேண்டும்.  கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாமல்தான் கற்றுக் கொண்டேன்.  கற்றுக் கொள்ள வேண்டும்.  அதற்காக எந்த அவமானத்தையும் ஏற்கலாம் என்பதே என் கொள்கையாக இருக்கும்.  ஆரம்பத்தில் ஒரு வார்த்தை புரியாது.  மீண்டும் மீண்டும் படித்து மீண்டும் மீண்டும் சந்தேகம் கேட்டு… தமிழவன், நாகார்ச்சுனன், எஸ். சண்முகம் என்று ஏராளமான பேர்.  இவர்களில் சண்முகத்தோடு மட்டும் தொடர்பில் இருக்கிறேன்.  மற்றவர்களுக்கு நான் வேண்டாதவன்.  நான் என்றால் என் எழுத்து என்று பொருள்.  எப்போதுமே.

Writing and Difference 1967-இல் வெளிவந்த சமயத்தில் சர்வதேச அளவில் தத்துவத் துறையில் ஒரு சிந்தனைப் புரட்சியே நடந்ததாகக் கருதினார்கள்.  அமைப்பியல்வாதம் (Structualism) பின் அமைப்பியல்வாதமாக (Poststructuralism) மாறியது அந்த நூலிலிருந்துதான்.  அதில்தான் கட்டுடைத்தல் (deconstruction) என்ற அணுகுமுறையையும் அறிமுகம் செய்தார் தெரிதா.  இதில் அவர் சொல்வதன் சாரம் என்னவென்றால், différer  என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தைக்கு முரண்பாடு என்று பொருள்.  உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன்.  ஆனால் இதுவே பெயர்ச்சொல்லாக மாறும் போது வித்தியாசம் என்று ஆகிறது.  Difference.  இதை தெரிதா différance என்ற புதிய வார்த்தையின் மூலம் விளக்குகிறார்.  என்ன விளக்குகிறார்? பேச்சை விட எழுத்துதான் முக்கியம்.  எழுத்தில்தான் இந்த வித்தியாசங்களை அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது.  மேலும், சொற்களின் மீது திணிக்கப்படும் நிலையான/இறுக்கமான/பன்முகத்தன்மையற்ற அர்த்தங்களைத் தளர்த்தி மூடப்பட்ட அமைப்புகளுக்கு இடையில் காலி இடங்களை உருவாக்க வேண்டும் என்கிறார்.  ”destabilizing fixed meaning and creating spaces in closed structures” என்பது தெரிதாவின் வார்த்தை. முரண்படுகிறேன் என்பதற்கும் வித்தியாசம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?  இந்த différance ஐ வைத்துத்தான் நாகார்ச்சுனன் தன் பத்திரிகைக்கு வித்தியாசம் என்ற பெயரை வைத்தார்.  அப்போது அப்பத்திரிகையுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டு நான் பிரிந்து விட்டேன்.  அந்தக் காலகட்டத்தில் அமைப்பியல்வாதத்தை உள்வாங்கிக் கொண்டு உருவான சில படைப்பிலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் பா. வெங்கடேசனும், எஸ். சண்முகமும் ஆவர்.  வெங்கடேசன் நாவலாசிரியர், சண்முகம் கவிஞர்.  இவ்வாறாகத்தான் ஒரு தத்துவப் பள்ளியை படைப்பிலக்கியவாதிகள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

அந்தக் காலகட்டத்தில் நான்கு அமைப்பியல்வாதிகளின் (பார்த், தெரிதா, ஃபூக்கோ, லக்கான் – Roland Barthes, Jacques Derrida, Michel Foucault, Jacques Lacan) புத்தகங்களும் நாகார்ச்சுனனிடம் மட்டுமே கிடைக்கும்.  தமிழவனோ பெங்களூரில் இருப்பார். என் சம்பளம் அப்போது ஆயிரம் ரூபாய் இருக்கும்.  புத்தக விலையோ அதை விட நூறு இருநூறு அதிகம் இருக்கும். அதுவும் கடையில் கிடைத்தால்.  நாகார்ச்சுனனிடம் சில மணி நேரங்கள் புத்தகத்தைக் கடன் வாங்கி போட்டோ காப்பி எடுத்து விட்டுக் கொடுப்பேன்.  அப்போதுதான் Xerox எந்திரங்கள் அறிமுகமாகியிருந்த காலம்.  ஆனால் ஒரு பக்கத்துக்கு ரெண்டு ரூபாய் என்பார்கள்.  ஸ்டூடண்ட்ஸ் செராக்ஸில் மட்டுமே ஒரு பக்கத்துக்கு 75 பைசா.  அதிலும் முன்பக்கமும் பின்பக்கமும் எடுத்தால் அஞ்சு பத்துப் பைசா குறையும் என்பதால் அப்படி எடுப்பேன்.  சண்முகம் அப்போது ரொம்ப வசதியான வீட்டுப் பிள்ளை என்பதால் அவரிடமும் இந்தப் புத்தகங்களெல்லாம் இருக்கும். 

சரி, இதையெல்லாம் படித்து என்ன பயன்?  இதையெல்லாம் நான் அறிவாக சேகரம் செய்து கொள்ளவில்லை.  இது முதல் விஷயம்.  உள்வாங்கிக் கொண்டேன்.  அது என் அறிதல் முறையை மாற்றியது.  அறிதல் முறை மாறினதால்தான் என்னால் அந்தக் காலத்திலேயே எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலையும் பிற்பாடு ஸீரோ டிகிரியையும் எழுத முடிந்தது.  இந்த இரண்டு நாவல்களும்தான் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் ஒரு புதிய அறிதல் முறையை, ஒரு புதிய perception-ஐ முன்வைத்தன.  அது பற்றியெல்லாம் நான் எழுதக் கூடாது.  இதைத்தான் நேசமித்ரன் பல மணி நேரங்கள் தன் உரையாடல்களில் பேசினார்.  ஃபேன்ஸி பனியன் வெளிவந்த காலகட்டத்தில் அதற்கு நாகார்ச்சுனனும் ஜமாலனும் எழுதிய மதிப்புரைகள் இன்றும் அமைப்பியல்வாதத்தைப் பயில நினைப்பவர்களுக்கு ஒரு அறிமுகமாக இருக்கும். 

இப்படி நான் பயின்ற ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகள் என் சிந்தனாமுறையில் ஏற்படுத்திய மாற்றம்தான் அதன் பயன்.  அந்தத் தத்துவவாதிகள் பற்றி நான் எழுதவில்லை என்பது முக்கியமே அல்ல.  இன்று இணையம் வந்த பிறகு அம்மாதிரி எழுத்து முறைக்கே அர்த்தமின்றிப் போய் விட்டது.  தெரிதாவின் Writiting and Difference-இன் சாரம் என்ன என்று கூகிளில் கேட்டால் நூறு பக்கத்துக்கு விளக்கம் கிடைக்கும்.  ஒரே ஒரு பக்கத்துக்கும் விளக்கம் கிடைக்கும்.   

நேற்று என் நூலகத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.  தனிநபர்களிடம் அப்படிப்பட்ட நூலகம் இந்தியாவில் இருக்க சாத்தியம் இல்லை.  கமல்ஹாசனிடமும் மிஷ்கினிடமும் பெரிய நூலகங்கள் உள்ளன.  ஆனால் என்னுடைய புத்தகங்களின் தேர்வு வேறு வகையானது.  நிறுவனங்களில் தில்லியில் உள்ள இந்திய இண்டர்நேஷனல் செண்டர் நூலகத்தை அடித்துக் கொள்ள முடியாது.  ஆனால் ஐஐசியில் உறுப்பினராக இருந்தால்தான் அதில் நுழைய முடியும்.  அந்த நிறுவனம் முழுக்க முழுக்க வங்காளிகளின் கையில் உள்ளது.  இன்னும் அது மலையாளிகளின் கண்ணில் படவில்லை.  நான் அந்த செண்டரில் உறுப்பினர் ஆக முயற்சி செய்தேன்.  மோடியிடம் பணி புரியும் ஒரு அதிகாரி மூலம்.  முடியவில்லை.  அந்த அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது.  ஆனால் முழுக்க முழுக்க வங்காளிகள் ஆதிக்கம். 

நேற்று குறிப்பிட்டது பற்றி யோசித்தீர்களா?  உலகமே தத்துவவாதிகளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.  கி.மு. நான்காம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கத்தில் எத்தனையோ நாடகாசிரியர்கள் இருந்தார்கள் எனினும் சாக்ரடீஸும் பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும்தானே இன்றளவும் உலக அளவில் பிரசித்தி பெற்றவர்களாக இருக்கிறார்கள்?  தமிழ்நாட்டில் இன்றும் கூட ஆண் குழந்தைகளுக்கு சாக்ரடீஸ் என்று பையர் வைக்கக் காரணம் என்ன?  சோஃபாக்ளிஸ் என்று பெயர் வைப்பதில்லையே?  அதேபோல் கார்ல் மார்க்ஸ்.  அவரது அரசியல் கோட்பாடுகளால் உலகின் 60 சதவிகித தேசங்கள் சீரழிந்து போயின என்றாலும் அவர் இருந்திராவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டுதல் ஒரு குற்றம் என்ற உணர்வே மனித சிந்தனையில் தோன்றியிராது.  இந்தியாவில் எத்தனையோ அஹம் ப்ரும்மாஸ்மியெல்லாம் பேசினாலும் சமத்துவம் பற்றிய தத்துவமே உதிக்கவில்லையே?  அடுத்து, மனித சிந்தனை வரலாற்றில் நடந்த மாபெரும் புரட்சி என்று வொல்த்தேரின் வருகையைக் குறிப்பிடலாம்.  சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தின் பிதாமகர் அவர். I disagree with what you say, but I shall defend to the death, your right to say it.

இது வொல்த்தேர் சொன்னது மட்டும் அல்ல. ஒட்டு மொத்த ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகமே இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக அப்படித்தான் இருந்து வருகிறது.  அதனால்தான் ஃப்ரெஞ்ச் மொழி இன்றளவும் புத்திஜீவிகளுக்கு நெருக்கமான மொழியாகவும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான elites விரும்புகின்ற மொழியாகவும் இருக்கின்றது.  இது வெறும் ஒரு மொழியின் சிறப்பு அல்ல.  அந்த தேசத்தின் ஒட்டு மொத்த தத்துவச் செழுமையின் விளைவு அது.  அதனால்தான் சொன்னேன், இந்த உலகம் தத்துவவாதிகளால் ஆளப்படுகிறது என்று.

ஆனால் தமிழ்நாடு சிந்தனை மரபுக்கு எதிரானது.  இங்கே இலக்கியவாதியாகக் கூட பிழைத்துக் கொள்ளலாம்.  ஆதி எழுத்தாளன் வியாசன் இருக்கிறான்.  ஆனால் தத்துவத்தின் பக்கம் போனால் விலாசம் இல்லாமல் போய் விடுவோம்.  அதனால்தான் தத்துவத்தைக் கற்றுக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டேன். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai