தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தத்துவத்தின் பக்கம் போனால் விலாசமின்றிப் போய் விடுவோம் என்று எழுதியிருந்தேன். உண்மைதான். பதினாறாம் நூற்றாண்டில் அப்பைய தீட்சிதர் என்ற ஒரு பிரமாதமான தத்துவ ஆசிரியர் இருந்தார். இந்திய வேதாந்தத்தை அப்பைய தீட்சிதரைத் தவிர்த்து விட்டு யாரும் கடக்க முடியாது. மிகவும் ஒரு வண்ணமயமான வாழ்வை வாழ்ந்தவர். அவரைப் பற்றி நான் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றே நினைத்திருந்தேன். ஏனென்றால், ஒருமுறை ”மது அருந்தினால் நம் உள்ளுக்குள்ளே உள்ள கெட்ட விஷயங்களெல்லாம் வெளியே வரும் என்கிறார்களே, என் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு கடும் போதையைத் தரக் கூடிய ஊமத்தை விதைகளைத் தின்றார். ஊமத்தையை அரைத்துக் குடித்து செத்துப் போனவர்கள் உண்டு. அதே சமயம் கடும் போதையைத் தரக் கூடியதும் கூட. அதைத் தின்ற தீட்சிதர் தன் சீடர்களிடம் தான் ’போதையில்’ சொல்வதையெல்லாம் பிரதி எடுங்கள் என்று சொன்னார். அவர் போதையில் இருந்த போது உள்ளே இருந்து வந்தது எல்லாமே சிவ தத்துவம். அதிலும் அவர் வாழ்ந்த காலத்தில் சைவ வைஷ்ணவச் சண்டை உச்சத்தில் இருந்த கட்டம். இரண்டுமே இரு வேறு மதங்களாகக் கருதப்பட்ட காலம். ஆத்மார்ப்பன ஸ்துதி என்ற அந்த 50 சுலோகங்களும் அவரது மேதமையையும் பக்தியையும் வெளிப்படுத்தக் கூடியவை. ஊமத்தையைத் தின்று விட்டுப் பாடியதால் உன்மத்த பஞ்ச சதி என்றும் அப்பாடல்கள் அழைக்கப்படுகின்றன. முதல் சுலோகமே எனக்கு விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் வித்தியாசம் இல்லை என்றுதான் தொடங்குகிறது. கலைஞர்கள் செய்வதை சாமானிய மனிதர்கள் செய்யக் கூடாது, பின்பற்றக் கூடாது என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறேன் இல்லையா, அப்பைய தீட்சிதரின் கதையைப் பாருங்கள். ஊமத்தையைத் தின்று விட்டு உன்மத்த நிலையில் சிவஸ்துதி செய்கிறார். ஐம்பது சுலோகங்கள் கொண்ட ஆத்மார்ப்பன ஸ்துதியின் கடைசி சுலோகத்தை மட்டும் தருகிறேன்.
ஆத்மார்ப்பணஸ்துதிரியம் பகவான்னிபத்தா
யத்யப்யநந்யமனஸா ந மயா ததாபி
வாச்சாபி கேவலமயம் ஷரணம் வ்ருணீதே
தீனோ வராக இத்தி ரக்ஷா க்ருபாநிதே மாம்
என் புலன்களின் முழுக்கட்டுப்பாட்டுடன் இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியை இயற்றவில்லை; எனினும் தயாநிதியே! இந்த வார்த்தைகளை மனமுருகாமல் மட்டுமாவது சொல்லுகிறானே என்று கருணை புரிந்து என்னை ரக்ஷிப்பாயாக!
இந்த ஸ்துதிக்கு சுவாமி பிரபஞ்ச நாதன் ஒரு அற்புதமான உரை எழுதியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே:
https://ia802801.us.archive.org/34/items/AppaiyaDheekshitarAthmarpanaSthuthiSwPrapanjanathan/Appaiya%20Dheekshitar%20Athmarpana%20Sthuthi%20-%20Sw%20Prapanjanathan.pdf
இன்று அப்பைய தீட்சிதர் பற்றி எழுதியதற்குக் காரணம், பாலசுப்ரமணியனின் கடிதம்.
வளன் அரசுவின் மதிப்புரை பற்றி: நீங்கள் மதிப்பிடப்பட வேண்டியது உங்கள் எழுத்துக்களால் மட்டுமே தவிர உங்கள் தோற்றத்தினால் அல்ல. அது ஒரு coincidence மட்டுமே. நீங்கள் ஒரு நடிகர் அல்லவே. எனவே உங்கள் தோற்றம் ஒரு முக்கியமான விஷயம் அல்ல. உங்கள் வார்த்தைகள்தான் பிரதானம். சிவா விஷ்ணு பற்றிய அவரது பார்வை மேலோட்டமானது. அது பற்றிய விவாதம் இப்போது தேவையில்லாதது. இப்போதெல்லாம் நிறைய inter caste திருமணங்கள் நடந்து வருகின்றன. அத்வைத தத்துவத்தில் ஆதி சங்கரருக்கு அடுத்தபடியாக சொல்லத்தக்க அப்பைய தீட்சிதர் முதலில் அய்யர் சமூகத்துப் பெண்ணைத் திருமணம் செய்து, பின்னர், ஒரு ஸ்ரீவைஷ்ண குலத்துப் பெண்ணைத்தான் மணந்தார்.
வளன் அரசு பதிவில் இருந்த ‘தோற்றம்’ பற்றி. பாலசுப்ரமணியன் சொல்வது போல் நான் நடிகன் அல்ல. நடிகர்களே தோற்றம் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள். ஆனால் நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என இருப்பவன். அப்படிப் பார்த்தால் நான் யோகாவின் பக்கம்தான் சென்றிருக்க வேண்டும். உடம்பு என்பது வெறும் தோற்றம் மட்டுமே அல்ல. உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போவதைப் பற்றி அல்ல மூலன் சொல்வது. ஆனாலும் ஒரு ஹெடோனிஸ்ட் என்ற முறையில் – ஒரு practicing hedonist என்ற முறையில் – நாற்பது வயது ஆனாலே முதுமை அடைந்து விட்டோம் என எண்ணி அதற்கேற்றாற் போன்ற வாழ்க்கையில் தன்னைப் பொருத்திக் கொண்ட இந்தியன் அல்ல நான். இது என் எழுத்தோடும் சம்பந்தப்பட்டது. பதினெட்டு வயது மாணவன் கூட என்னை சாரு என்று அழைக்கிறான் என்றால், அதற்கு என்னுடைய எழுத்தில் தெரியும் “இளமை”தான் காரணம். இளமை என்ற பெயர் தமிழில் எப்படிக் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும். இங்கே ஒரு பத்திரிகைக்கு இளமை என்று பெயரிட்டால் அது செக்ஸ் பத்திரிகை. நான் இளமை என்று அதைச் சொல்லவில்லை. சம காலத்தில் வாழ்தல் என்பதைச் சொல்கிறேன். இளைஞர்களால் என்னோடு சகஜமாக உரையாட முடிகிறது. 66 வயது ஆனாலும் நான் அவர்களைப் போல் பேசுகிறேன். க்றைஸ்ட் பல்கலைக்கழகத்தில் (பெங்களூர்) ஒரு அறுபது வயது ஆசாமி எனக்கு முன்னே பேசினார். பேசி விட்டு ஒரு அவசரமான வேலை நிமித்தம் கிளம்பி விட்டார். விவாதத்தை ஒருங்கிணைத்த அபிலாஷ் என்னிடம் இவர்களுக்கு (மாணவர்களை சுட்டிக் காண்பித்து) நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது, கண் சிமிட்டும் நேரத்தில் ஐம்பது வயதுக்கு மேல் ஆனவர்களின் பேச்சு எதையுமே கேட்காதீர்கள் என்றேன். அதுவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மாணவர்கள் அத்தனை பேரும் ஆஹாகாரம் செய்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் நான் சொன்னதை விளக்கினேன். தோற்றம் என்பதை நீங்கள் இன்றைய எழுத்தாளர்களோடும் பொருத்திப் பார்க்கலாம். உதாரணத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும் சொல்லலாம். காலம் பூராவும் இளைஞர்களோடுதான் அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவன் புதையல் போன்ற ஒரு நூலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான். பதினெட்டு வயது இருக்கும். நான் ஜெயமோகனின் வாசகன் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டான். எங்கள் மூவருக்கும் இன்னும் இருபது ஆண்டு ஆனாலும் வயது ஆன தோற்றம் வராது. ஆனால் இலக்கிய வாசனை அற்ற, படிப்பு அறிவு இல்லாத எல்லோரும் நாற்பது வயதிலேயே கிழடு தட்டிப் போவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். மேற்கத்தியர்களோடும் இந்த இந்திய மனநிலையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். எண்பது வயதுக்கு மேலும் தன் இணையோடு உலகில் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று ஒரு கையில் பியரும் ஒரு கையில் சுருட்டுமாக அலையும் மேற்கத்தியர் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். மனோபாவத்தில் நானும் அப்படிப்பட்டவன் தான். நாற்பது ஐம்பதிலேயே மனமும் உடலும் கிழடு தட்டிப் போகும் இந்தியர்களை எண்ணி எப்போதும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இப்போதும் என்னிடம் வந்து பலர் “வயசுக்குத் தக்க பேசுங்கள்” என்று அறிவுரை பகரும்போது எனக்கு அது நகைச்சுவையாகத்தான் தெரிகிறது. அது என்ன ’வயசு’? அது எப்போதிருந்து தொடங்குகிறது?
இதெல்லாம் தவிர, வளன் சொன்னது போல நான் ஒரு அலங்காரப் பிரியன். அப்படி நான் எழுத்தாளர்களில் பிரபஞ்சனை மட்டுமே பார்த்திருக்கிறேன். இப்போது கொரோனா காரணத்தினால் முகப்பசை மட்டும் போட்டுக் கொள்வதில்லை. ஏனென்றால், இப்போது மனிதர்களுக்கு மரணம் வருவதில்லை. மனிதர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். கொரோனா ஊரை விட்டு அகன்றதும் முகப்பசைக்குப் போகலாம் என்று இருக்கிறேன். கடவுளின் கருணை.
தோற்றத்தில் அக்கறை செலுத்துவது என்பது ஒரு வாழ்க்கை முறை. அது பற்றித் தனியாக ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும். முதலில் கண். கண்களுக்கு ஐ ஷேட். மூன்று விதமான ஐ ஷேடுகள் உள்ளன. ஒன்று, உறங்கும்போது போட்டுக் கொள்வது. சதி லீலாவதி படத்தில் கமல் விமானத்தில் போகும்போது பயன்படுத்துவார். வெளிச்சமான இடத்தில் தூங்க வசதியாக இருக்கும். இன்னொன்று, காந்தம் வைத்த ஐ ஷேட். இன்னொன்று, கற்றாழை வைத்த ஐ ஷேட். இந்த இரண்டையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, உபயோகப்படுத்தும்போது வெளியில் எடுத்து ஐந்து நிமிடம் வைத்து விட்டு, கண்களில் மாட்டிக் கொண்டு பத்து நிமிடம் கண்களை மூடியபடி இருந்தால் பத்து மணி நேரம் பனிரண்டு மணி நேரம் படிப்பவர்களுக்குக் கண் அயர்ச்சி, தலைவலி ஆகிய பிரச்சினைகள் வராது. இன்னொரு விஷயம். எனக்கு இதுவரை தலைவலியே வந்ததில்லை. மது அருந்திக் கொண்டிருந்த போது இரவு பூராவும் ரெமி மார்ட்டின் அருந்தி விட்டு (ஒன்றரை லிட்டர்) ஆறு மணிக்குப் படுத்து ஏழு மணிக்கு எழுந்து குளித்து விட்டு மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். பார்த்தவர்கள் மிரண்டிருக்கிறார்கள். ரொம்பத் தெளிவாக கச்சிதமாக இருப்பேன். ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட. ஆனால் பாருங்கள், மதுவை நிறுத்திய பிறகு பத்து மணிக்கே கொட்டாவி விட ஆரம்பித்து விடுகிறேன். சரி, தலைவலிக்கு வருவோம். ஏற்கனவே சொன்னேன், உடலைப் பேணுதல் என்பது ஒரு வாழ்க்கை முறை. எத்தனையோ ஆண்டுகளாக ஐ ஷேட் பயன்படுத்துகிறேன். ஒருமுறை ரயிலில் ஐ ஷேட் அணிந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பாலு என்ற நண்பர் மணியிடம் போய் அண்ணே, அண்ணே, சாரு அண்ணே முகமூடி போட்டுக்கிட்டுத் தூங்குறார் என்று அலறி அடித்துக் கொண்டு சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் பாலு போட்ட சத்தத்தில் என்னவோ ஏதோ என்று எழுந்து பார்த்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. முகமூடி என்ற வார்த்தையைத் தூக்கக் கலக்கத்தில் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் ஓடும் ரயிலில்?
பல பெண்கள் என்னிடம் உங்கள் முகம் எப்படி பளபளப்பாக இருக்கிறது என்று கேட்பதுண்டு. முதல் காரணம், தியானம். இரண்டாவது காரணம், எப்போதும் மகிழ்ச்சி. மூன்றாவது காரணம். ஒரு பெரிய புராணம். 25 ஆண்டுகளாக நான் சோப்புப் போட்டுக் குளிப்பதில்லை. ஸ்நானப் பொடிதான். காப்பிரைட் அவந்திகா. மேலே நான் குறிப்பிட்ட வாழ்க்கை முறைக்கு உங்கள் துணையும் தோதாக இருக்க வேண்டும். அந்தப் பொடியில் இருக்கும் பொருட்கள்:
பூலாங்கிழங்கு, பூந்திக் கொட்டை, புங்கங்காய், பூஞ்சாந்து, வெட்டிவேர், திரவியப்பட்டை, ஆவாரம்பூ, தேவதாரு, மகிழம்பூ, கோஷ்டம், கருஞ்சீரகம், முல்தானிக் கட்டி, நெல்லி வற்றல், வசம்பு, வெந்தயம், சம்பங்கி விதை, கோரைக் கிழங்கு, மகிழம்பூ, கிச்சிலிக் கிழங்கு, ரோஜா இதழ், சோம்பு, அகில் கட்டை, கார்போக அரிசி, தும்மராஷ்டம், விலாமிச்சை, கோஷ்டம், ஏலரிசி. எல்லாம் காய்ந்தது. இது எல்லாமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். மிக்ஸியில் போட்டு பொடி செய்தால் அதுதான் ஸ்நானப் பொடி. இது ஆண்களுக்கு. இதில் சம அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்தால் அது பெண்களுக்கு. நான் கொஞ்சமாய் கஸ்தூரி மஞ்சளும் சேர்த்துக் கொள்வேன். கூர்ந்து பார்த்தால் என் சருமம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம். அதிகம் சேர்த்தால் தெரிந்து விடும். இதைத்தான் நான் 26 ஆண்டுகளாக குளியலுக்கு உபயோகப்படுத்துகிறேன்.
முகத்துக்கு மட்டும் வேண்டுமானால், மகிழம்பூ பொடி, கோரைக் கிழங்குப் பொடி, கிச்சிலிக் கிழங்குப் பொடி, சந்தனத் தூள் நான்கையும் சம அளவில் எடுத்து (மகிழம்பூ பொடி மட்டும் அளவு கூடுதலாக இருக்கலாம்) பன்னீரில் கலந்து உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, எப்போது தேவையோ அப்போது பாலில் குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து நீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.
இப்படி தனியாக ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன. அதனால்தான் இது ஒரு வாழ்க்கை முறை என்று சொன்னேன்.
வயதாகி விட்டது என்று உணர்வது ஒரு இந்திய மனோபாவம். மேற்கில் அறுபது வயதில்தான் குழந்தை பெற்றுக் கொள்கிறான். தென்னமெரிக்காவில் அறுபது வயதுக்காரன் எல்லாம் ஐந்து வயதுக் குழந்தையோடு செல்லும் போது என் வழிகாட்டி ரொபர்த்தோவிடம் இது இவருடைய பேத்தியா என்று கேட்டால் ரொபர்த்தோ ஆச்சரியப்படுவார். ஏன் அப்படிக் கேட்கிறேன் என்று. நான் ஏன் அப்படிக் கேட்கிறேன் என்றே அவருக்குப் புரியாது. எங்கள் ஊரில் நாற்பது வயதிலேயே பெட்ரூமில் தம்பதிகள் குழந்தை குட்டிகளை அனுமதிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று விளக்கிய பிறகு அவர் மகளுக்கே ஐந்து வயதுதான் என்று சொன்னார்.
ஆனாலும் இந்த அலங்காரம், பளபளப்பு எல்லாமே நிலையற்றது. எழுத்துதான் நிற்கும். நிலையாமை பற்றி பப்பு மூலம்தான் எதார்த்தமாகத் தெரிந்து கொண்டேன். பப்புவைப் போன்ற ஒரு அழகான நாய் அபூர்வம். சாலையில் நடந்து போக முடியாது. எல்லோருமே அப்படிக் கொஞ்சுவார்கள். ஆறு வயதில் அதற்கு சரும வியாதி வந்து விட்டது. பிறகு அது பனிரண்டு வயதில் சாகும் வரை அது போகவில்லை. எந்த மருந்திலும் குணமாகவில்லை. எப்பேர்ப்பட்ட அழகு எப்படி ஆகி விட்டது. ஆனால் பப்பு பப்புவாகவே இருந்தது. அப்போதுதான் நிதர்சனமாகத் தெரிந்து கொண்டேன், அழகு என்பது ரொம்ப ரொம்ப சாதாரணமான விஷயம் என்று.
உலகில் நான் மகாத்மா காந்தி அளவுக்கு மதிக்கும் மற்றொருவர் ஆப்ரஹாம் லிங்கன். அவர் அதிபராவதற்கு முன்பாக கேலிச் சித்திரக்காரர்களெல்லாம் லிங்கனின் முகத்தை சாத்தானின் முகமாக வரைவதுண்டு. அவர் முகத்தைப் போல் கிண்டல் செய்யப்பட்ட வேறு முகம் இல்லை. ஆனால் லிங்கன் ஒரு மகாத்மா. எழுத்தாளர்களில் சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி. அவலட்சணமான முகம். முகம் பூராவும் அக்நே. ஆனால் அவர் எழுத்துக்கு மட்டுமே அமெரிக்காவில் படு தீவிரமான ரசிகர் கூட்டம் இருந்தது. இப்போது கூட ஒரு நண்பர் என்னிடம் ஏன் அமெரிக்கா என்று கேட்டபோது ப்யூக் வாழ்ந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.
எதுவுமே நிலையானது அல்ல; கலை ஒன்றைத் தவிர.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai