கருப்பட்டி உருண்டைகளும் எலந்தவடையும்…

நேற்று என் நண்பர் ராமசுப்ரமணியன் கருப்பட்டியால் செய்த பலவித உருண்டைகளை டன்ஸோ மூலம் அனுப்பியிருந்தார்.  அவருக்கு என் நன்றியும் அன்பும் ஆசீர்வாதமும்.  இவருக்குத்தான் நிலவு தேயாத தேசம் நூலை சமர்ப்பணம் செய்திருந்தேன்.  அந்த உருண்டைகளைப் போல் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை.  அவ்வளவு ருசி.  நேற்றே தீர்ந்து விட்டது.  நாளை வரும் போது ஒண்ணு ரெண்டு கிலோவை அள்ளிக் கொண்டு வர வேண்டியதுதான்.  அதுசரி, இந்த ஆண்டு என்ன, எலந்த வடை பேச்சே இல்லையே? ஆனால் என் சிஷ்யை காயத்ரியை என்ன இருந்தாலும் பாராட்டத்தான் வேண்டும். தன்னால் ஏன் உருண்டைகளும் எலந்தவடைகளும் அனுப்ப முடியவில்லை என்பதையும் தன்னுடைய வேலைப் பளுவைப் பற்றியும் அரை மணி நேரம் விளக்கினார்.  கண் கலங்கி விட்டது.