ஒரே நாளில் எழெட்டு தடவை…

நேற்று போய் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது நர்ஸ் சொன்னார், இருபத்து நான்கு மணி நேரம் ஜுரம் இருக்கும், அதனால் பாரசிட்டமால் போட்டுக் கொள்ளுங்கள் என்று.  இது எனக்கு முன்பே தெரியும் என்பதால் வீட்டில் ரெண்டு பேருமே படுத்துக் கொண்டால் வீட்டுப் பூனையான லக்கியும் நானும் பட்டினி கிடக்க நேரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான் அவந்திகாவிடம் ஒருத்தர் ஒருத்தராகப் போட்டுக் கொள்வோம், நான் போட்ட அடுத்த வாரம் நீ போட்டுக் கொள்ளலாம் என்றேன்.  ஆனால் கணவன் சொல்வதை கேட்கவே கூடாது என்ற சபதத்தோடுதான் தமிழ்ப் பெண்களெல்லாம் இக்காலத்தில் பிறவி எடுப்பதாகத் தெரிவது என் நண்பர்களின் புகார்களிலிருந்தும் புரிகிறது.  அதற்கேற்ப, நீயும் நானுமே ஒன்றாகப் போட்டுக் கொள்வோம் என்றாள் அவந்திகா.  ஒரு கட்டத்தில் அங்கே உள்ளவர்கள் நீங்கள் ஆஸ்ப்ரின் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டு, நான் ஆமாம் என்றதும் அப்படியானால் ஐந்து நாட்கள் அதை நிறுத்தி விட்டு பிறகு வாருங்கள் என்றார்கள்.  சரி, நல்லதாயிற்று, நீ போட்டுக் கொள் என்றேன் அவந்திகாவிடம்.  அவளோ அத்தனை பேர் எதிரிலும் “நான் உயிர் வாழ்வதே உனக்காகத்தானேப்பா, உனக்கே போடவில்லை என்றால் எனக்கும் வேண்டாம்” என்று உரக்கச் சொல்லவும் அத்தனை பேரும் எங்களையே பார்த்தனர்.  இதெல்லாம் எனக்கு ரொம்பப் பழகி விட்டது என்றபடியால் நான் அதிர்ச்சியே அடையாமல் என் வாசகரும் நெருங்கிய நண்பரும் இதய அறுவை சிகிச்சை நிபுணருமான மணிகண்டனைத் தொடர்பு கொண்டேன்.  அவர் சிகிச்சையில் இருக்கும் நேரம்.  போனை எடுக்கவில்லை.  உடனே என்னுடைய குடும்ப டாக்டரும் என்னுடைய இதயத்தின் கண்காணிப்பாளருமான சிவகடாட்சத்தைத் தொடர்பு கொண்டேன்.  உடனே எடுத்து விட்டார்.  சார், கோவிட்ஷீல்ட் என்று ஆரம்பித்ததுமே போட்டுக்கலாம் போட்டுக்கலாம் ஆஸ்ப்ரின் சாப்டாலும் போட்டுக்கலாம் என்று உரத்த குரலில் சொன்னார்.

அந்த அவசரத்திலும் சார்… என்று இழுத்தேன்.  ஆமாம் சாரு, யார் இந்தப் புரளியைக் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை.  இதோடு உங்கள் போன் இன்று அம்பதாவது போனாக இருக்கும் என்றார். 

அதற்குப் பிறகு என்ன, ரெண்டு பேருமே போட்டுக் கொண்டு வந்தோம்.  எனக்கு பாரசிட்டமால் போட்டால் அன்றைய தினம் பூராவும் கிறக்கமாகவே இருக்கும் என்பதாலும், மாலையில் ஜுரம் எதுவும் இல்லை என்பதாலும் வெறுமனே தூங்கி விட்டேன்.  காலையில் வழக்கம்போல் நாலு மணிக்கு எழுந்து கொள்ள முடியாமல் இடுப்பு வலித்தது. ஒரே நாளில் ஏழெட்டு முறை… சீச்சி… இந்த உதாரணத்தைத்தான் காலையில் ஒரு உற்ற நண்பரிடம் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டேன். (வயசாகியும் இன்னும் நீங்கள் மாற மாட்டேன் என்கிறீர்களே சாரு?) உதாரணத்துக்கெல்லாமா வயசை இழுப்பது?  சரி, வேறு உதாரணம் சொல்கிறேன்.  ஒரே நேரத்தில் நூத்தம்பது தண்டால் எடுத்தது போல் இடுப்பெல்லாம் வலி.  ஆறு மணிக்கு எழுந்தால் லக்கி பசியில் கதறுகிறது.  அதற்காக பாத்திரத்தைத் தேய்த்து, மீனை அவித்துக் கொடுத்தேன்.  வாக்கிங் போக முடியாது.  கஷாயம் எதுவும் குடிக்காமல் காஃபி குடித்து விட்டு மாடியில் போய் உட்கார்ந்து மேற்படி உதாரணத்தைச் சொல்லி திட்டு வாங்கி விட்டு பிறகு சங்கீதம் கேட்டு விட்டுக் கீழே வந்தேன்.  உதவிக்கு ஒரு ஆள் இல்லை.  மணி ஒன்பது.  அவந்திகா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.  தொட்டுப் பார்த்தேன்.  லேசான ஜுரம். 

நானே இட்லி போட்டு சாப்பிட்டு விட்டு எடுபிடி வீட்டு வேலைகளை முடித்து விட்டு இந்தப் பக்கம் வந்தேன். 

ஸ்ரீராம் கேட்டார்.  கோவிட்ஷீல்ட் இரண்டாவது டோஸ் போட்டு, அதன் பின் உடம்பில் வேலை செய்ய 14 நாட்கள் ஆகும். அப்படி இருக்கும் போது நாளை எப்படி புத்தக விழா போகிறீர்கள்?  நான் சொன்னேன். “நீங்கள் வேறு.  அது எனக்கும் தெரியும்.  வாஸ்தவத்தில் என் உடம்பில் ரத்தமா ஓடுகிறது?  கஷாயம்தானே ஓடுகிறது?  மாதம் பதினைந்து நாள் மாற்றி மாற்றி ஏதாவது கஷாயம்தானே குடித்துக் கொண்டிருக்கிறேன்?  அந்த நம்பிக்கைதான்.  இதோ அடுத்த வாரம் கூட இந்து காந்தம் கஷாயமும் சுதர்ஸனா மாத்திரையும் சாப்பிடப் போகிறேன். 

***

சென்ற மாத சந்தாவும் நன்கொடையும் ரொம்பவும் சுருங்கி விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai