டி.எம். கிருஷ்ணா – 2

இன்னும் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. ரஞ்சனி, காயத்ரி இருவரும் பெரியார் பற்றிக் கூறிய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். பாப் பாடகர் பாப் டிலனுக்கு 2016இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவுக்கும் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் திட்டுபவர்களுக்கும் அவதூறு செய்பவர்களுக்கும் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. இதை என் விஷயத்திலேயே கவனித்து விட்டுத்தான் சொல்கிறேன். … Read more

டி.எம். கிருஷ்ணா

ஒரு மாதத்துக்கு முன்னால் ஒருநாள் வினித் ஒரு ஆடியோ பதிவைப் போட்டுக் காண்பித்தார்.  கர்னாடக இசை.  அந்தப் பாடகரின் குரலும் பாவமும் தீவிரமும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் மட்டுமே காணக் கூடியதாக இருந்தது.  யாரப்பா இது, இதுவரை நான் இவரைக் கேட்டதில்லையே, பூரணமான இறையருள் பெற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்றேன்.  சிரித்துக் கொண்டே அவருடைய இன்னொரு காணொலியைக் காண்பித்தார் வினித்.  இருபது வயது இளைஞன் ஒருவன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் துலங்க அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தான்.  பார்ப்பதற்கு … Read more

Itipiso Bhagawa

“அண்மையில் பெட்டியோ நாவல் படிக்கும் போது இந்தப் பாடலை கேட்டேன். இதுவரை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கில்லை. Pure Bliss.” என் வாரிசுகளில் ஒருவனாகிய வளன் அரசு ஃபேஸ்புக்கில் மேற்கண்ட வாக்கியத்தை எழுதியிருக்கிறான். வளன் ஒரு பாதிரியாராக இருந்தாலும் எல்லா மதங்களையும் எல்லா தீர்க்கதரிசிகளையும் மதிப்பவன். என் வாரிசாகிய ஒருவன் அப்படித்தானே இருக்க முடியும்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுதானே என் மதம்? வளன் அரசுவின் யூதாஸ் நாவலை நீங்கள் வாசித்துப் பார்க்க வேண்டும். … Read more

ஓர் உரையாடல்

இந்த உரையாடல் மற்றவற்றை விட நன்றாக வந்திருப்பதாகத் தெரிகிறது. கேட்டுப் பாருங்கள். அரை மணி நேரம். https://www.swellcast.com/harpercollins/bf3c756e-27a2-4a19-bc5b-38da8d786752/talkto-charu-nivedita-author-conversations