அராத்துவின் புதிய சிறுகதை

அவர் எழுதுவது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்ற பேச்சுக்கே இடமில்லை; பாரம்பரியமான எழுத்தாளர்கள் யாவரும் அராத்துவை ஒரு எழுத்தாளராகவே ஒத்துக்கொள்வதில்லை. அப்புறம்தானே நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற பேச்சு. ஆனால் நான் உலக இலக்கியத்தை நன்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பு பற்றி நான் பெருமையாகவே சொல்லிக் கொள்ளலாம். எனக்கு ஒரு புத்தகத்தை அவசரமாகப் படிக்க வேண்டும். ஆனால் அதன் விலை எக்கச்சக்கம். எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் இரண்டு மூன்று பேரில் ஸ்ரீராமும் ஒருவர். அவரிடம் சொன்னேன். … Read more

கோணங்கியின் அத்துமீறலும் அதிகாரத்தின் கொடுக்குகளும், எழுத்தாளர் என்ற சலுகையும்: அராத்து

”இவனுவங்களையெல்லாம் நடுத்தெருவுல நிய்க்க வச்சு சுடணும் சார்” என்பதிலிருந்து “எழுத்தாளனும் சைக்கிளுக்கு பங்ச்சர் போடுபவனும் ஒன்றுதான்” என்பது வரை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அராத்து எழுதியிருப்பதோடு முற்றிலுமாக உடன்படுகிறேன். ஏனென்றால், அராத்து அதிகாரம் பற்றிப் பேசுகிறார். அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியமைத்து, பின்னர், அதைத் துஷ்பிரயோகம் செய்யும் நிலை. அதைப் பற்றித்தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். – சாரு இனி அராத்து: கோணங்கியின் பாலியல் அத்துமீறலைப் பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் … Read more

ஒரு சினிமா காட்சி: அராத்து

ஜட்ஜ் : ரேப் பண்ணியா? கலைஞன் : ஐயா நான் கலைஞன். இருள் ஒளிப்பாதையில் பயணிக்கும்போது கிடைக்கும் நுட்பமான அனுபவங்களை அதன் இருண்மைத் தன்மையோடு …. ஜட்ஜ் : யோவ் இன்ஸ்பெக்டர் …ஒனக்கு இதே வேலையாப்போச்சி. இவரு மெண்டல் போலருக்கு …மொதல்ல மெண்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பணும்… இன்ஸ் : இல்லீங்க ஐயா …மெண்டல் மாதிரி நடிக்கிறாரு. பத்துப்பதினஞ்சி பேர இதே மாதிரி பண்ணிருக்காரு. ஜட்ஜ் : மெண்டல் மாதிரி நடிக்கிறியா? கலைஞன் : ஒரு தடவை என்கூட … Read more

சூம்பி இலக்கியம்: அராத்து

ஆண் பெண் பாலுறவு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானதுதான் ஆண் ஆண் மற்றும் பெண் பெண் பாலுறவும் என்று நினைப்பவன் நான்.  அதனால்தான் என் வலது காதில் வளையம் அணிந்திருக்கிறேன்.  ஆண் ஆண், பெண் பெண் உறவில் எந்தப் பிறழ்வும் இல்லை என்று நம்புகிறேன்.  அதனால்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் bisexual என்று அறிவித்தேன். மேலும், ஒரு ஆண் அல்லது பெண் தன் ஆயுள் முழுவதும் இன்னும் ஒரே ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோதான் பாலுறவு … Read more

NFT – அராத்து – டிஜிடல் புரட்சி

அராத்து எழுதிய நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை என்.எஃப்.டி. மூலம் முதல் பிரதி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது.  அதுவும் விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களில்.  அடுத்த பிரதிகளின் விலை பத்தாயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.  அதுவும் மிண்ட் பண்ணி இரண்டு தினங்களில் விற்றன.  இதுவரை பத்து பிரதிகள்.  ஆனால் என்.எஃப்.டி.யில் நூல் விற்பனை என்பது நான் நினைத்தது போல் அத்தனை சுலபம் அல்ல போல் தெரிகிறது.  நூலை வடிவமைக்க (வடிவமைப்பு மற்றும் இசை) இரண்டு … Read more