அல்லாஹு அக்பர்…

இந்தப் பாடலை ஒரே நேரத்தில் திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நண்பர் சொன்னார், ”கடைசியில் கேட்பதை நிறுத்தி விட்டேன். இன்னொரு முறை கேட்டால் முஸ்லீமாக மாறி விடுவேன்.” என்ன ஆச்சரியம் என்றால், இன்னொரு நண்பருக்கும் அனுப்பினேன். அவரும் அதே வார்த்தைகளைச் சொன்னார்.

ஒரு பதில்…

டியர் சாரு நீங்க  கம்னாட்டி  ஜெயமோகன் என எழுதியதைபார்த்து  ஏன் இப்படி எழுத வந்தது என வியப்புவேதனை  சரியில்லை இதைப்போல எழுதுவதுஎன  தெரிவித்து க்கொண்டு முடிக்கிறேன் ஆரா என் அன்பு நண்பரும் அடிக்கடி என் எழுத்து பற்றி எனக்குக் கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பவருமான கவிஞர் ஆரா அவர்களின் மேற்கண்ட கடிதம் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். எங்கள் ஊர்ப் பக்கத்திலும் – பொதுவாக உலக வழக்கத்திலும் – அதி பிரியமான – அதி வாத்சல்யமான, செல்லமான, கொஞ்சலான … Read more

முந்நூறுக்குள் ஒரு கதை

67 வயது வரை எனக்குப் பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது.  அதாவது, சென்ற ஆண்டு வரை.  சத்தியம்.  இப்போது பொறாமை என்ற கெட்ட குணம் என்னையும் பீடித்து விட்டது.  ஆரம்பித்து வைத்தது பெருந்தேவி.  எனக்குக் கவிஞர்கள் மீது எந்தப் புகாரும் இருந்ததில்லை.  அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அது வேறு ஏரியா.  இப்போது ரமண மகரிஷி உயிரோடு இருந்தால் அவர் மீது உங்களுக்குப் பொறாமை வருமா.  அந்த மாதிரிதான் எனக்குக் கவிஞர்கள்.  ஆனால் பெருந்தேவி … Read more

ArtReviewவில் அடியேன் கட்டுரை

ArtReview Asiaவிலும் ArtReview-விலுமாக கடந்த நாலு ஆண்டுகளாக நான் Notes from Madras என்ற தலைப்பில் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது ஓவியம் மற்றும் சிற்பங்களுக்கான பத்திரிகை. நான் மட்டுமே அதில் தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய பல்வேறு விஷயங்களை எழுதி வருகிறேன். பொதுவாக இப்படி வெளியே போய் எழுதுபவர்கள் மேற்கத்தியர்களுக்குத் தோதாக இந்தியாவைத் திட்டி எழுதுவது வழக்கம். நான் இந்தியாவைத் திட்டி எழுதுவேன், ஆனால் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் அல்ல. இங்கே … Read more

ஓர் உலகத் தரமான சிறுகதை

சமீபத்தில் நான் படித்த, மறக்கவே முடியாத ஓர் உலகத் தரமான சிறுகதை இது. சுஷில்குமாரின் தொகுப்பை விரைவில் படிக்க வேண்டும் என்று பார்க்கிறேன்.

சமஸ் -இன் முகநூல் பக்கத்திலிருந்து

ஐந்தாண்டுகள் இருக்கும். “மகிழ் கவிதை மாதிரி அப்பப்போ நாலைஞ்சு வரி சொல்றான். இதை எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியலை” என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னார் நண்பர் ஆசை. அப்போது மகிழுக்கு வயது நான்கு. குழந்தை மேதமையையும் பிரபல்யத்தையும் குழந்தைமைக்கான பெரும் சுமையாகக் கருதிவந்தவர் ஆசை என்பதால், மகிழ்ச்சியைவிடவும் குழப்பமே அவரைச் சூழ்ந்திருந்தது. “அது எப்படியோ, அவன் அவ்வப்போது சொல்வதைக் குறித்து வையுங்கள்” என்று சொன்னதை மட்டும் தவறாமல் செய்துவந்தார். குழந்தைமை மொழியே கவித்துமானது என்பது போக, குழந்தைகள் சில … Read more